புதுக்கோட்டை அருகே பழைய கோயில் ஒன்று கண்டுபிடிப்பு. கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக்கல்லூரி வரலாற்று துறை மாணவியர் ஆய்வில் கிடைத்தது.

கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலை கல்லூரி புதுக்கோட்டை முதுகலை வரலாற்று துறை மாணவிகள் கல்லூரி முதல்வர் அனுமதியோடு குளத்தூர் தாலுகா மலம்பட்டி கிராமத்தில் தங்கள் களப்பணியினை மேற்கொண்டனர். மலம்பட்டி கிராமத்தில் மேற்கு புறத்தில் அமைந்துள்ள அடர்ந்த முட்கள் நிறைந்த காட்டுப்பகுதிக்குள் புதுக்கோட்டை கே கே சி .கல்லூரி வரலாற்று துறை மாணவிகளும் புதுக்கோட்டை தொல்லியல் கழகமும் இணைந்து ஆய்வினை மேற்கொண்ட பொழுது முட்புதருக்குள் இரண்டு சிவன் கோயில்கள் இருப்பதை கண்டு பிடித்தனர்.

அந்த சிவன் கோயில்களில் ஒரு கோயிலில் மட்டும் கிட்டத்தட்ட 20 க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் கிடைத்திருக்கிறது இந்த கல்வெட்டுகளை வரலாற்று துறை மாணவிகள் கல்வெட்டுகளை படி எடுத்து படித்துப் பார்த்ததில் இக்கோயில் முற்கால சோழர் காலத்தை சேர்ந்தது என்பது தெரியவந்தது. இக்கோயில் கல்வெட்டுக்கள் ஒன்றில் ராஜராஜ சோழன் மெய்க்கீர்த்தியோடு கல்வெட்டுகள் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் மேலும் ஒரு கல்வெட்டில் விக்ரமகேசரி என்ற பெயர் வந்துள்ளது. இவர் கொடும்பாளூரை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்த வேளீர் அரசன் பூதிவிக்ரமா கேசரியை குறிப்பதாக உள்ளது மேலும் இக்கோயிலில் உள்ள கட்டுமான பகுதிகளும் சிற்பங்களும் சோழர்கால அமைப்பை ஒத்துள்ளது என்பதை அறிய முடிகிறது. இக்கோயில் கிட்டத்தட்ட 1000 வருடங்கள் கொண்டதாக கணக்கிடலாம்.

இக்கோயிலில் பூதி விக்ரம கேசரி, தன் மனைவியர் கற்றளை பிராட்டியார், வராகணவாட்டி ஆகிய இருவருடன் சிவபெருமானை வழிபடுவது போன்ற சிற்ப அமைப்புகளும், லிங்க திருமேனிகளும் முருகன், துர்க்கை சண்டிகேஸ்வரர், நந்தி தேவர், விஷ்ணு,|விஷ்ணு பாகமான ஆவுடையார், ருத்ரபகமான லிங்க திருமேனி ஆகிய திருமேனிகள் ஆங்காங்கே சிதறி கிடக்கின்றன. கோயில் முற்றிலும் அழிந்த நிலையில் காணப்படுகிறது இக்கோயிலை மலம்பட்டி ஊரார்களும், மக்களும், அரசும், இந்து அறநிலையத்துறையும்சமூக ஆர்வலர்களும் இணைந்து கோயிலின் பழமையை கருத்தில் கொண்டு வருங்கால சந்ததியினருக்கு எடுத்துச் செல்வதற்கு முன்னோடிகளாக இருந்து இக்கோயிலை சரி செய்ய வேண்டும் என்பதுதான் கல்லூரி மாணவர்களின் அவாவாக உள்ளது.

இக்கோயில் தொன்மை வரலாற்றை படிப்பதற்கு மாணவிகள் தங்களது முயற்சியை இன்னும் மேற்கொள்வார்கள் என்பதில் ஐயமில்லை இந்த களப்பணியில் வரலாற்று துறை மாணவிகள் செல்வி ஸ்ரீநிதி |செல்வி, சுபாஷ் சினி மற்றும் வரலாற்று துறை தலைவர் முனைவர் மு.காயத்திரி .தேவி புதுக்கோட்டை தொல்லியல் துறைத் தலைவர் அ. மணிகண்டன், கரு.ராஜேந்திரன், இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டு மலம்பட்டி சிவன் கோயில் தொன்மை வரலாற்றை வெளிக்கொண்டு வருவதில் முக்கிய பங்காற்றினர்.




