• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

நிதி அமைச்சரின் ஆடியோ குறித்து விசாரணை நடத்த வேண்டும் – இபிஎஸ் மதுரை விமான நிலையத்தில் பேட்டி

ByKalamegam Viswanathan

Apr 23, 2023

நிதி அமைச்சரின் ஆடியோ உண்மையானது தானா என்பது குறித்து மத்திய அரசு விசாரணை நடத்த வேண்டும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மதுரை விமான நிலையத்தில் பேட்டி
சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வந்த அதிமுக பொதுச்செயலாளர். எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது;-
சமீபத்தில் வலைதளங்களில் வரும் நிதி அமைச்சரின் ஆடியோ உண்மையானது தான் என்றும் முப்பதாயிரம் கோடி விவாகரத்தை நாங்கள் கவர்னரிடம் புகார் அளிப்போம் என்றும், மத்திய அரசு இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.மேலும் இந்த ஆட்சியில் திமுக அரசு மக்களுக்கு நன்மை செய்யவில்லை கொள்ளையடிப்பது குறிக்கோளாக கொண்டுள்ளது எங்கள் மீது எவ்வாறெல்லாம் வழக்கு தொடுக்க முற்பட்டார்கள் முதலமைச்சர் எதற்கெடுத்தாலும் அறிக்கை கொடுப்பவர் இந்த ஆடியோ குறித்து ஏன் அறிக்கை கொடுக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.மேலும் 12 மணி நேர சட்ட மசோதாவை எதிர்க்கட்சியாக இருந்தபோது எதிர்த்தவர்கள் தற்போது அதை நிறைவேற்ற முயற்சிக்கிறார்கள் அதற்கு அவர்களின் கூட்டணிக் கட்சிகளே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


இந்த அரசு முதலாளிகளுக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்து விட்டது என்றும் ஒரு தொழிலாளியை எட்டு மணி நேரம் வேலை 8 மணி நேர உறக்கம் எட்டு மணி நேரம் ஓய்வு என்று இருக்க வேண்டும் மனிதன் ஒன்று மிஷின் அல்ல என்றும் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து கொடநாடு கொலை வழக்கில் மர்மம் இருப்பது உண்மை எங்கள் அரசு தான் அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்தது நடவடிக்கை எடுத்தது ஆனால் அந்த பயங்கர செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு ஜாமீன் கொடுத்தது அவர்களுக்காக வாதாடியது திமுக என்றும் தெரிவித்தார்.மேலும் பாஜகவுடன் கூட்டணி தொடர்கிறது., கூட்டணி குறித்து நாங்கள் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய தலைவர் நட்டா போன்றவர்களிடம் தான் பேசுவோம் வேற யாரைப் பற்றியும் பேச வேண்டியது இல்லை என்றும் தெரிவித்தார்.
இந்த பேட்டிக்கு முன்னதாக மதுரை மாவட்ட செயலாளர்கள் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு,ஆர்பி உதயகுமார்,மற்றும் ராஜன் செல்லப்பா ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.தொடர்ந்து மதுரை விமான நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள வரவேற்பு மேடையில் பேசிய போது தேர்தல் ஆணையம் நம்மளை அங்கீகரித்துள்ளது அங்கீகரித்த முதல் நிகழ்ச்சியாக தற்போது மதுரை வந்துள்ளேன்.மதுரை மண் அதிமுகவுக்கு ராசியான மண் என தெரிவித்தார் தொடர்ந்து அதிமுக கழகத் தொண்டர்கள் எடப்பாடி பழனிச்சாமி வரவேற்றனர். தொடர்ந்து சாலை மார்க்கமாக விருதுநகர் புறப்பட்டு சென்றார்.