அரியலூர் பகுதியில் உள்ள சுதந்திரப்போராட்ட தியாகிகளின் குடும்பத்தை போற்றும் நிகழ்வில் மாணவர்கள் வரலாறு மீட்புக்குழுவினர் இந்திய சுதந்திர தினம் 79 வது ஆண்டில் அடையாளப்படுத்தும் நிகழ்வை ஒருங்கிணைத்து இருந்தனர்.
திருமானூர் ஒன்றியத்தில் இந்திய தேசிய இராணுவப்படையில் 1943 ல் 16 பேர் இருந்தனர். அதில் கண்டராதித்தம் முத்து செம்பன் 2006 ல் இறந்து விட்டார். அவரது மனைவி சமுத்திரம் 93 அகவையில் நலமுடன் உள்ளார். மத்திய மாநில அரசு சுதந்திரப் போராட்ட தியாகிகளின் ஓய்வூதியம் பெற்று வருகிறார். சந்தித்து வரலாறு மீட்புக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தங்க சண்முக சுந்தரம், ஆசிரியர் எழிலன்பன் கண்டராதித்தம் புதுக்கோட்டை மணல்மேடு அம்பேத்கர் நகரை சேர்ந்த் மாணவ மாணவியர்களுடன் சுதந்திரப் போராட்ட தியாகி குடும்பத்தினரை சந்தித்தனர்.

திருமானூர் ஒன்றியத்தில் 16 பேர் இந்திய தேசிய இராணுவப்படையில் பங்கேற்று சுதந்திரப்போராட்டத்தில் தற்போதைய அரியலூர் மாவட்ட மக்களின் சார்பில் 90 இலட்சம் பேர் கலந்து கொண்ட சுதந்திரப்போரில் பங்கேற்றவர்களின் பட்டியல் கண்டராதித்தம் கிராமத்தைச் சேர்ந்த முத்து செம்பன் புதுக்கோட்டையை சேர்ந்த தர்ம கண்ணு நடேசன் குலமாணிக்கம் கிராமத்தைச் சேர்ந்த காந்தி ஞானாதிக்கம் ஆபிரகாம் ராஜாராம் தேவராஜ் மேலப்பழுவூர் நடேசன் மலத்தாங்குலம் கிராமத்தைச் சேர்ந்த ஜோசப் ரபேல் பூண்டி கிராமத்தைச் சேர்ந்த ஆரோக்கியசாமி இஸ்கேல்
கீழப்பழுவூர் கிராமத்தைச் சேர்ந்த ராசு மல்லூர் கோவிந்தன் காரைப்பாக்கம் கோவிந்தசாமி உள்ளிட்டோர் ஒற்றுமை விசுவாசம் தியாகம் என்ற தாரக மந்திரத்தோடு இந்திய தேசிய இராணுவப்படையில் பணியாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட மாணவ மாணவியர் கூறியதாவது நாங்கள் புத்தகத்தில் மட்டுமே படித்த தியாகிகளை அவர்களது குடும்பத்தினோரோடு நேரில் சந்தித்தது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்ததாக கூறினர்.






; ?>)
; ?>)
; ?>)
