• Thu. May 2nd, 2024

ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோருக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

BySeenu

Apr 2, 2024

ஏப்ரல் 2-ம் தேதி உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினமாக அனுசரிக்கப்படுகிறது. அதனை பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் எவ்வாறு குழந்தைகளிடம் பேச வேண்டும் என்று விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவை வடகோவை அருகே மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள குஜராத் சமாஜில் பெற்றோர்கள் அமைப்பு சார்பாக விழிப்புணர் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டு குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். மேலும் நிகழ்ச்சியில் தீபா மாலினி பெற்றோர்களிடம் Spelling to Communicate என்ற தலைப்பில் பெற்றோர்களிடம் சிறப்புரையாற்றினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சங்கரராமன்:-

ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பெற்றோர்கள் குழந்தைகளிடம் எவ்வாறு பேச வேண்டும் குழந்தைகளை எவ்வாறு படிக்க வைக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாக கூறினார். மேலும் Spelling to Communicate என்ற தலைப்பு மூலமாக குழந்தைகளுக்கு படிப்புக்கு ஏற்ப அவர்களை வழி நடத்த இந்த நிகழ்ச்சி பெற்றோர்களுக்கு மிக அளவில் வெற்றிகரமாக இருக்கும். ஆட்டிசம் என்பது நோய் இல்லை. அது குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய ஊனமுற்றும் என்றும் அதனை முழுமையாக சரி செய்து விட முடியாது. அதிலிருந்து அவர்களை ஓரளவு பேச வைப்பதற்கான முயற்சி எடுக்க முடியும் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *