• Sun. Jun 30th, 2024

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இருசக்கர வாடகை வாகனத்தை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

BySeenu

Jun 27, 2024

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தீரன் தொழிற்சங்க பேரவை சார்பாக கோவை மாநகரில் இயங்கி வரும் இருசக்கர வாடகை வாகனத்தை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் இருசக்கர வாகனத்தை வாடகைக்கு இயக்குவதால் பொதுமக்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு வருவதாகவும் இதனால் ஆட்டோ, டாக்ஸி வாடகை வாகனங்கள் நலிவடைந்து உள்ளதாகவும் இரு சக்கர வாடகை வாகனத்தை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என்று மத்திய,மாநில அரசுக்கு கோரிக்கை முன் வைத்து கோஷங்களை எழுப்பினர்.
தமிழக அரசு ஆட்டோ,கால் டாக்ஸி ஓட்டுநர் சங்க உறுப்பினர்களுக்கு மானிய விலையில் டீசல், பெட்ரோல் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், சாலைகளை பராமரிக்கவும் அவிநாசி மேம்பாட்டு விரைந்து முடிக்க வேண்டும் என்றும் சுங்க கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். மோட்டர் வாகன தொழிலாளர்களின் நலனை கருத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வாடகை வாகன ஓட்டுநர்களுக்கான பணிகளை வரைமுறைபடுத்த வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *