மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் இன்று அனைத்திடங்களிலும் மகளிர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக
மகளிர் தினத்தை முன்னிட்டு வள்ளலார் கோயில் அருகே அமைந்துள்ள தனியார் உணவகத்தில் இன்று ஒரு நாள் மட்டும் அமுல் ஐஸ்கிரீம் ஒரு ஸ்கூப் ஒரு ரூபாய்க்கு வழங்கப்படுகிறது.பார்சல் கிடையாது என்றும், நேரில் வருபவர்களுக்கு ஸ்டாக் உள்ளவரை ஒரு ரூபாய்க்கு ஐஸ்கிரீம் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று பொதுமக்கள் கல்லூரி மாணவர்கள் மாணவிகள் சிறுவர் சிறுமிகள் ஆர்வத்துடன் வந்து ஐஸ்கிரீமை வாங்கி பருகி வருகின்றனர்.
