• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மதுரையில் தான் அமித் ஷா காலூன்ற போகிறார்..,

BySeenu

Jun 5, 2025

கோவை விமான நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்பொழுது பாரதிய ஜனதா கட்சியில் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதியின் மகள் காலமான நிலையில் அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதற்காக வந்திருக்கிறோம் என தெரிவித்தார்.

பெங்களூரில் கூட்ட நெரிசலில் 11 பேர் இறந்த நிகழ்விற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாகவும், அதில் ஒருவர் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை சேர்ந்த காமாட்சி என்பது மிகவும் வருத்தம் வேதனைக்கு உரிய செய்தி என தெரிவித்தார். கர்நாடக மாநிலத்தில் ஆளுங்க சேர்ந்தவர்கள் சரியான முறையில் ஏற்பாடு செய்யாமல் இருந்தது உயிரிழப்பிற்கு காரணம் என தெரிவித்தார். அதே மகாராட்டிர மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சி காலத்தில் இது போன்ற நிகழ்ச்சியில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது எனவும், இது போன்ற நிகழ்வுகளை அரசு பாதுகாப்பாக நடத்த வேண்டும் என தெரிவித்தார்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என தெரிவித்த அவர், தர்மபுரி மாவட்டத்தில் எஸ்.பி. அலுவலகத்திற்கு புகார் கொடுக்க சென்ற விவசாயிடம், மனு வாங்காத நிலை இருக்கிறது எனவும், இதன் காரணமாக அவர் தற்கொலைக்கு முயன்று தற்போது மருத்துவமனையில் இருக்கிறார் எனவும், அரசு அவருக்கு உரிய சலுகைகளை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார். விவசாயிகளை பொறுத்தவரை திமுக அரசு வஞ்சிக்கிறது எனவும் , டெல்டா விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் நெல்லிற்கு 400 கோடி ரூபாய் வரை கொள்முதல் பணப் வழங்காமல் இருக்கின்றனர் தெரிவித்தார். தமிழகத்தில் அனைத்து விவசாயிகளையும் பாதுகாக்க வேண்டியது திமுக அரசின் கடமை எனவும் தெரிவித்தார்.

யாரும் யாரையும் தரக்குறைவாக பேசக்கூடாது என்பதுதான் எங்கள் நிலைப்பாடு என தெரிவித்த அவர் , பாட்டாளி மக்கள் கட்சியில் நடக்கும் விவகாரம் என்பது அவர்களின் உட்கட்சி விவகாரம் என தெரிவித்தார். அதை பேசுவது அவ்வளவு நாகரிகமாக இருக்காது என தெரிவித்த அவர், அப்பா மகனுக்கு இடையே இருக்கக்கூடிய சொந்த பிரச்சனையை அவர்கள் பேசி தீர்க்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

குருமூர்த்தி, சைதை துரைசாமி ஆகியோர் தனிப்பட்ட முறையில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸை சந்திக்க சென்றிருக்கின்றனர் எனவும், அதற்கு பாஜகவிற்கும் எந்த தொடர்பு இல்லை எனவும் தெரிவித்தார். சமாதானம் அனைத்து இடங்களிலும் இருக்க வேண்டும் , அனைவரும் போரணியில் இருந்து திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம் எனவும் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம் சிவகிரியில் கைதானவர்கள் 19 கொலைகள் செய்து இருப்பதாக வாக்கு மூலம் கொடுத்து இருக்கின்றனர் எனவும், ஏற்கனவே கைதாகி இருப்பவர்கள் நிரபராதிகளா ? தவறான முறையில் காவல் துறையில் இருப்பவர்கள் தவறே செய்யாதவர்களை கைது செய்யப்பட்டு இருக்கிறார்களா? எனவும் தெரிவித்தார். 19 கொலைகளை தற்பொழுது கைதானவர்கள் ஒப்புக் கொண்டிருக்கும் நிலையில் இதற்கு முன்பு கைதானவர்களை சரியாக காவல்துறை கைது செய்யவில்லை என தெரிவித்தார். இதற்கு அரசாங்கம் பொறுப்பல்ல, காவல் துறை தான் பொறுப்பு எனவும் தெரிவித்தார்.

மதுரையில் வரும் 8 ம் தேதி கால் பதிக்க வேண்டும் என்பதற்காகதான் அமித்ஷா வருகின்றார் எனவும், கால் மட்டும் அல்ல வேரும் பதிக்கும், ஆலமரமாக முளைக்கும், பசுஞ்சோலையாக மாறும் எனவும் தெரிவித்தார். திருப்பரங்குன்ற முருக பக்தர் மாநாட்டில் நாங்கள் ஒன்று கூடினால் அது செயின்ஜார்ஜ் கோட்டையில் எதிரொலிக்கும் எனவும் தெரிவித்தார். விஜய்க்கு ஏற்கனவே அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது எனவும் பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நகேந்திரன் தெரிவித்தார்.