• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

ஜன.12ல் அனைத்து ரேஷன் கடைகளும் இயங்கும்..!

Byவிஷா

Jan 8, 2024

பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கும் பொருட்டு, ஜனவரி 12ஆம் தேதி அனைத்து ரேஷன் கடைகளும் இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் ரூ.1000 ரொக்கப்பணம் வழங்கப்பட இருக்கிறது. மேலும், இதற்கான விநியோகம் ஜனவரி 10ஆம் தேதி முதல் ஜனவரி 14-ஆம் தேதி வரையிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரொக்கத்தொகையை பெறுவதற்கான டோக்கன் நேற்று முதல் வழங்கப்பட்டு வருகிறது. இன்றும் டோக்கன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
இந்நிலையில், பொதுவாக, இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை வழங்கப்படும். ஆனால், தற்போது ரேஷன் தொகுப்பினை வழங்குவதற்காக ஜன.12 (வெள்ளிக்கிழமை) ரேஷன் கடைகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி நாளை ஈடுகட்டும் விதமாக மற்றொரு நாள் ரேஷன் கடை ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.