ஏஐடியூசி உள்ளாட்சி சம்மேளன மாநிலச் செயலாளர் டி தண்டபாணி தலைமையில் நகராட்சி ஏஐடி யூசி தொழிற்சங்கத்தின் தூய்மை பணியாளர்கள் அரசு நிர்ணய சம்பளத்தை அரியலூர் நகராட்சி நிர்வாகம் வழங்கிட வேண்டும் என கோரிக்கை, நகராட்சி மேலாளரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

அம்மனுவில் குறிப்பிட்டுள்ளதாவதுஅரியலூர் நகராட்சியில் பொது சுகாதாரப் பணியில் ஈடுபட்டு வரும் நிரந்தர பணியாளர் கள் மிக மிகக் குறைவே, காலிப் பணியிடத்திற்கு ஆட்கள் நியமனம் செய்யப்படவில்லை. திருச்சி விஷன் கேர் சர்வீஸ் காண்ட்ராக்ட் 2023 ஜூனிலிருந்து அரியலூர் நகராட்சியில் துப்புரவு பணி மேற்கொண்டு வருகிறது. அதற்கு பின்பு இருந்த ஒப்பந்த தூய்மை பணியாளர்களின் எண்ணிக்கையை குறைத்து தற்போது 73 பேர்களே தூய்மை பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர், ஓட்டுநர் மற்றும் மேஸ்திரி என மொத்தம் 88 பேர்களுக்கு கணக்கு காட்டுகின்றனர்.


இவர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு 62ன் படி நிர்ணய ஊதியம் அடிப்படை ஊதியம் ரூபாய் 10,000 ஆகும். ஒவ்வொரு ஆண்டும் அரசு அறிவிக்கும் அகவிலைப்படியை சேர்த்து வழங்கப்பட வேண்டும். அவ்வாறு வழங்கப்பட வேண்டிய நாள் ஊதியம் 2023 ஆம் ஆண்டுக்கு ரூபாய் 610 ஆகும், 2024 ஆம் ஆண்டுக்கு ரூபாய் 638 ஆகும், 2025 ஆம் ஆண்டுக்கு ரூபாய் 645ஆகும், இவ் ஊதியம் வழங்க மறுக்கும் அரியலூர் நகராட்சி நிர்வாகம் கடந்த 30 மாதங்களாக மிகக்குறைவான ரூபாய் 382ஐ மட்டுமே எந்த உயர்வும் இன்றி ஒப்பந்ததாரர் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. மாவட்ட கலெக்டர் கூட நாள் ஊதியமாக நடப்பாண்டு ரூபாய் 434 உத்தரவு பிறப்பித்து இருக்கிறார். ஆகவே ஊதியத்தை உயர்த்த வேண்டுமென வலியுறுத்தப்படுகிறது, வழங்கும் ஊதியத்தில் EPF பிடித்தம் செய்யப்படும் 12 சதவீத தொகையை EPF கணக்கில் செலுத்தாமல் PF சட்டத்தையே ஏமாற்றி குறைத்து செலுத்தி வந்ததால் ஒவ்வொரு தொழிலாளிக்கு மாதாந்திரம் ரூ,800 பணம் இழப்புக்கு ஆளாகி கடந்த 28 மாதங்களாக சுமார் ரூபாய்-22 ஆயிரத்துக்கு மேல் தொழிலாளி பணத்தை ஏமாற்றி மோசடி செய்திருக்கிறார்கள்.

இதற்கு நகராட்சி நிர்வாகம் உடைந்தையாக இருந்து வருகிறது. இந்த இழப்பீட்டு பணத்தை உடன் சம்பந்தப்பட்ட தொழிலாளர்களுக்கு திரும்ப வழங்கப்பட வேண்டும். மாதம் 30 நாள் வேலை செய்யும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 4 நாள் ஊதியத்தை பிடித்து 26 நாள் மட்டுமே ஊதியம் வழங்கும் அநியாயப் போக்கினை கைவிடப்பட வேண்டும். நிரந்தர தொழிலாளர்களுக்கு உரிய சேமநலநிதி வட்டியுடன் கூடிய இருப்பு தொகை 2009 ஆண்டிலிருந்து வருட வாரியாக கணக்கிட்டு கணக்கு சீட்டு ஒவ்வொருக்கும் கொடுக்கப்பட வேண்டும்.
துப்புரவு தொழிலாளர் குடியிருக்கும் தெற்கு பெரிய தெரு காலனி பகுதியில் சுற்றி ஆக்கிரமிப்புப்பட்டு பாதை வழி இல்லாமல் அவதிப்படும் நிலையை போக்கிட உடனடியாக சர்வே செய்து ஆக்கிரப்புகளை அகற்றி பாதை வசதி செய்வதோடு அக்காலியிடத்தில் துப்புரவு பணியாளர்களுக்கு குடியிருப்பு வசதி கட்டிக் கொடுக்கப்பட வேண்டும். மேற்கண்டவாறு பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மகஜரை 17.12.2025 இன்று அளவில் நிரந்தர மற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பழைய நகராட்சி அலுவலகத்தில் இருந்து திரளாக சென்று புதிய நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையர் இல்லாததால் மேனேஜரிடம் – ஏ ஐ டி யூசி உள்ளாட்சி சம்மேளன மாநிலச் செயலாளர் டி தண்டபாணி, கோரிக்கை மனுவை அளித்து விளக்கிப் பேசினார்.
தொடர்ந்து நகர்மன்ற தலைவர் அலுவலகத்திலும் மனு அளிக்கப்பட்டது. உடன் சங்க நிர்வாகிகள் ரெ,நல்லுசாமி – செ,மாரியப்பன்- ம, கோபி – பெ, பெரியசாமி-ரெ, வெங்கடேசன் – பா, காத்தவராயன் -க, அஞ்சலை- க,கலையரசி- அ,பொன்னம்மாள்-வீ, உஷாராணி – க, நாகூரான் – செல்வமணி- ரா, ராணி- வெ, செல்வராணி- அருந்ததி- செ, கலா -நீ, சூரியா – பூங்கோதை – மோகன் – தனுசுகொடி உட்பட திரளாக கலந்து கொண்டனர்.
தொடர்ந்து கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியர்- தஞ்சை RDMA – சென்னை நகராட்சி நிர்வாக இயக்குனர் மற்றும் AITUC மாநில மையம் ஆகியோர்களுக்கு இக்கோரிக்கை மகஜருடன் அனுப்பி வைக்கப்பட்டது.




