மதுரை விமான நிலைய விரிவாக்க நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில் நீதிமன்ற விசாரணைக்கு பிறகு, சின்ன உடைப்பு மக்கள் கலந்தாலோசித்து இன்று இரவு போராட்டம் தொடருமா.? என முடிவெடுப்பதாக தெரிவித்துள்ளனர்.
மதுரை விமான நிலையம் 63.17 ஏக்கர் பரப்பளையில் விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டு சின்ன உடைப்பு, பரம்புபட்டி உள்ளிட்ட கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. இதில் சின்ன உடைப்பு கிராமத்தில் மட்டும் 146 நபர்களின் வீடுகள் நிலங்கள் என 189 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ள நிலையில். சின்ன உடைப்பு கிராம மக்கள் பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தங்களை மீள்குடி அமர்வு செய்யாமல் இங்கிருந்து வெளியேற்றக் கூடாது என நேற்று நீதிமன்றத்தில் அவர்கள் வழக்கு தொடர்ந்த நிலையில் சின்ன உடைப்பு பகுதியில் மீண்டும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சூழலில் வழக்கு இன்று மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது அதில் வருகிற 19ஆம் தேதி வரை சின்ன உடைப்பு கிராம மக்களின் வீடுகளை அகற்ற எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கும் தங்களது போராட்டம் தொடரும் எனவும் இன்று மாலை அனைத்து ஊர் நாட்டாமை தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தி அடுத்த கட்டம் குறித்து முடிவெடுப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

