நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி ஆலம்பாளையம் பேரூர் கழகம் சார்பாக அதிமுக புதிய உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி மற்றும் ஆலோசனைக் கூட்டம் ஆலம்பாளையம், காவிரி RS, ஒட்ட மெத்தை பகுதிகளில் நடைபெற்றது.
இன்நிகழ்ச்சிக்கு அதிமுக கழக அமைப்பு செயலாளர், நாமக்கல் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சரும் குமாரபாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பி. தங்கமணி கலந்து கொண்டு புதிய உறுப்பினர்களுக்கான அட்டை வழங்கி கட்சி உறுப்பினர்களுக்கு 2026-தேர்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார்.

ஆலோசனை கூட்டத்தில் பேசிய அவர் நாடாளுமன்ற தேர்தல் வேறு சட்டமன்றத் தேர்தல் வேறு இன்று பொதுமக்கள் தங்களிடம் தெரிவிக்கின்றனர். 2026 இல் அதிமுக நிச்சயமாக ஆட்சி அமைக்கும். திமுக எப்பொழுதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் விசைத்தறி தொழில் நலிவடைந்து எடைக்கு போடும் நிலைமைக்கு தள்ளப்படுகின்றனர். இந்தப் பகுதி விசைத்தறி நிறைந்த பகுதியாகும், தறி தொழிலை பற்றி சட்டமன்ற கூட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக குரல் கொடுத்தாலும் அவர்கள் செவி மடிக்க மறுக்கின்றனர். மூன்றை ஆண்டு காலம் முடிந்துவிட்டது இனி ஒன்றை ஆண்டு காலம் மட்டுமே உள்ளது. ஆகையால் தேர்தலை ஆரம்பிக்கும் சூழ்நிலை உள்ளது. முதல் கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் அதன்பிறகு சட்டமன்றத் தேர்தல் வர உள்ளது.அதற்கு நாம் தயாராக வேண்டும். அதற்காகத்தான் ஒவ்வொரு ஊராட்சியாகவும் பேரூராட்சி ஆகவும் நானே நேரில் சென்று கழக உறுப்பினர்களுக்கு அடையாள அட்டையை வழங்கி அறிவுரை வழங்கி வருகின்றேன்.

இன்று முதல் புதிய உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று மாதத்தில் தினந்தோறும் புதிய உறுப்பினர் அட்டையை வழங்கும் பொழுது கட்சி வலுப்பெறும் இதனால் இயக்கம் வலுவடைந்து நாளை ஆட்சிக்கு வருவது எளிதாக இருக்கும். அதன் அடிப்படையில் தான் கழக பொதுச் செயலாளர் நமக்கு அறிவுரை வழங்கி, கூட்டத்தில் பேசினார்.
