• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக உறுப்பினர் தளவாய் சுந்தரம் கடிதம்…

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி அதிமுக உறுப்பினர் தளவாய் சுந்தரம் கடிதம் எழுதியுள்ளார். நாகர்கோவில் புதிய வருவாய் வட்டம் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ கோரிக்கை விடுத்தனர்.

நாகர்கோவிலை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் உருவாக்க வேண்டும் எனவும், கன்னியாகுமரியை தலைமையிடமாகக் கொண்டு அகஸ்தீஸ்வரம் வட்டம் செயல்பட வேண்டும் எனவும் முன்னாள் அமைச்சர் என். தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அகஸ்தீஸ்வரம் வட்டத்தில் தற்போது ஒரு வட்டாட்சியர் ஆட்சி எல்லை மட்டுமே உள்ளதால் மக்கள் சேவைகளில் தாமதம் ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெரும் மக்கள் தொகை, பரந்த பரப்பளவு 277.55 சதுர கி.மீ. பரப்பளவிலும், 5.5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகையையும் கொண்டுள்ளதன் காரணமாக வட்டப் பிரிப்பு அவசியம் என அவர் வலியுறுத்தினார்.

நாகர்கோவில், இராஜாக்கமங்கலம் குறு வட்டங்களை இணைத்து, நாகர்கோவில் வட்டம் (148.23 ச.கி.மீ., 3.89 லட்சம் மக்கள்) மற்றும் கன்னியாகுமரி, சுசீந்திரம் குறு வட்டங்களை இணைத்து அகஸ்தீஸ்வரம் வட்டம் (129.32 ச.கி.மீ., 1.61 லட்சம் மக்கள்) உருவாக்கலாம் என கூறினார்.

இக்கோரிக்கையின் மூலம் பொதுமக்கள் அரசுப் பயன்களை சுலபமாக பெற முடியும் எனவும், இந்த கோரிக்கையை அரசாங்கம் விரைவில் நிறைவேற்ற வேண்டும்
என் தளவாய் சுந்தரம், முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.