• Sun. Nov 2nd, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

அதிமுக பொதுச்செயலாளர், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தது குறித்து, ஆர்.பி. உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கை…

ByKalamegam Viswanathan

Mar 27, 2025

டெல்லியில் அதிமுக பொதுச் செயலாளர் உள்துறை அமைச்சர் சந்தித்தது குறித்து, தமிழக எதிர்க்கட்சி துணைத் தலைவர் திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி. உதயகுமார் பதிவாக வெளியிட்டுள்ளார்.

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்..,

தமிழக மக்கள் நலனுக்காகவும் காவேரி பிரச்சனை மற்றும் மேகதாணு பிரச்சனைக்காகவும், தமிழகத்தில் பின்பற்றி வரும் இரு மொழிக் கொள்கையை தொடர்ந்து பின்பற்றவும், நாடாளுமன்ற மறு சீரமைப்பு செய்யும் பொழுது தமிழகத்தில் நாடாளுமன்றத்தில் தொகுதியில் எந்தவித பாதிப்பு இல்லாமல் இருப்பதற்காகவும், தமிழகத்தில் நீர் பற்றாக்குறை அதிக இருப்பதால் கோதாவரி காவேரி வைகை இணைப்பை உடனடியாக செயல்படுத்த வேண்டும் எனவும், காவிரியில் சாயக் கழிவுகள் மற்றும் கழிவு நீர் கலக்காத அளவிற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மேகதாடு அணு கட்டுவதற்கு கர்நாடக அரசு முயற்சி செய்து வருகிறது. அதை தடை செய்ய வேண்டும் எனவும், முல்லை பெரியாறு அணை ஏற்கனவே உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்தப்பட்டது.

மேலும் 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்க மேலும் முல்லை பெரியார் அணையை பலப்படுத்த வேண்டும் எனவும், தமிழகத்தில் நடைபெற்று வரும் ரயில்வே பணிகளை துரிதப்படுத்த வேண்டும் எனவும், தமிழகத்தில் நடைபெற்றுள்ள டாஸ்மார்க் ஊழலை வெளிக்கொண்டு வரவேண்டும் எனவும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்து அதிமுக பொதுச் செயலாளர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசி உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் அமித்ஷாவை சந்தித்தது அவர்கள் பார்வைக்கு எப்படி இருக்கிறதோ எங்களுக்கு தெரியாது நாங்கள் தமிழக மக்களின் நலனுக்காகவே நாங்கள் மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தோம் என உதயகுமார் அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.