• Sat. Mar 28th, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

குமரி மீனவர்களைமீட்க அ.தி.மு.க. கோரிக்கை..,

கன்னியாகுமரி மாவட்டம் இராஜாக்கமங்கலம் துறை, பெரியகாடு உள்ளிட்ட 48 மீனவ கிராமங்களை சேர்ந்த 447 பேர் ஈரானில் போர் காரணமாக கடலில் சிக்கி தவிக்கின்றனர். அவர்கள் வெளிநாட்டு உரிமையாளர்களின் படகுகளில் மீன்பிடி தொழில் செய்து வந்த நிலையில், கரைக்கு திரும்ப முடியாமல் படகுகளிலேயே தங்கி உள்ளனர். உணவு, குடிநீர், உடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி அவதிப்படுவதாக குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சட்டமன்ற உறுப்பினர் தளவாய்சுந்தரம் நடவடிக்கை எடுத்து, மேலவை உறுப்பினர் தம்பிதுரையிடம் கோரிக்கை வைத்தார். அதனைத் தொடர்ந்து மேலவையில் அவர் விவகாரத்தை எடுத்துக்கூறி, மீனவர்கள் உள்ள இடத்தை கண்டறிந்து, அவர்களுக்கு உணவு, மருத்துவம் உள்ளிட்ட உதவிகளை உடனடியாக வழங்கி, பாதுகாப்பாக தாயகம் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.