• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

அதிமுக- பாஜக கூட்டணி தமிழகத்தில் எடுபடாது..,

BySeenu

Aug 19, 2025

கோவை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் காங்கிரஸ் கமிட்டியின் சொத்து பாதுகாப்பு குழு தலைவர் KV தங்கபாலு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், தமிழகம் முழுவதும் காங்கிரஸ் வளர்ச்சிக்காக தேசிய தலைவர்கள், உட்பட பலரும் எண்ணற்ற சொத்துக்களை வழங்கி உள்ளார்கள்,
இன்னும் பல சொத்துக்கள் சீரமைக்க வேண்டும் அவற்றை ஒருங்கிணைப்பது போன்ற முயற்சிகளில் ராகுல்காந்தி ஆகியவை உத்தரவில் பேரில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.

இது சம்பந்தமாக தொடர்ந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறோம், என்றும் எங்கெல்லாம் காங்கிரஸ் சொத்துக்கள் இருக்கிறதோ அது காங்கிரஸ் கட்சியாக பயன்படுத்தபடுகிறதா? என்றும் ஆய்வு செய்து வருகிறோம் என்றார்.

முன்பை விட தற்போதைய காலத்தில் காங்கிரஸ் கட்சியின் சொத்து உயர்ந்துள்ளது என்றும் காங்கிரஸ் கட்சி கட்டிடங்கள் கட்சிக்கு மட்டுமல்லாமல் வணிக ரீதியாகவும் பயன்படுத்த உள்ளதாக தெரிவித்தார்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் சி.பி.ராதாகிருஷ்ணன் துணை தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்படிருப்பது அரசியல் என்று சாடினார். 2026 தேர்தல்- அகில இந்திய காங்கிரஸ் வழிகாட்டி உள்ளது, அனைத்து கிராமங்களில் காங்கிரஸ் கட்சி புத்துணர்வு பெற்று வருகிறது என்றார்.

மத்திய அரசு தமிழகத்திற்கு ஏதுவும் செய்யவில்லை என்றும் ஆனால் தமிழக அரசு சாதனைகளை மத்திய அரசே பாராட்டி உள்ளது என்றும் பல துறைகளில் தமிழக அரசை மத்திய அரசு பாராட்டி உள்ளது என்றார். மேலும் 2026லும் காங்கிரஸ், திமுக கூட்டணி வெற்றி பெறும் என்றார். தேர்தல் காலங்களில் அரசியல் ரீதியாக அதிக தொகுதிகளை கேட்பது இயல்பு தான் என்றும் தேர்தல் நேரத்தில் கலந்து பேசி தொகுதிகள் பற்றி முடிவெடுப்போம் என்று தெரிவித்தார்.

காங்கிரஸ் உட்கட்சி பிரச்சினை குறித்தான கேள்விக்கு இனி வரும் காலங்களில் ஒன்றாக ஓரணியில் இருப்போம் என்றார்.

விஜயுடன் ரகசிய கூட்டணி என்ற தகவல் எங்களுக்கு வரவில்லை என்றும் கூட்டணி எல்லாம் மேல்மட்டத்தில் ராகுல்காந்தி தான் முடிவெடுப்பார் என்றார்.

எடப்பாடி பழனிச்சாமி என்றைக்கு பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தாரோ அன்றைக்கு அதிமுக முடிந்தது என்று நினைக்கிறேன் என்றும் அதிமுக- பாஜக கூட்டணி தமிழகத்தில் எடுபடாது என்றார். தற்போது பாஜகவால் ஓட்டு போடுவதிலும் ஆபத்து வந்துவிட்டதாகவும், தேர்தல் அதிகாரி கேள்வியே கேட்க கூடாது என்று நீதிமன்றத்தில் முறையிடுகிறார் என கூறியவர் ஜனநாயகத்தை காக்க ராகுல்காந்தி மிக பெரிய முன்னெடுப்பை முன்னெடுக்கிறார். அவருக்கு பல்வேறு தலைவர்கள் ஆதரவு தருகிறார்கள் என்றார்.