குமரிக்கு அகவை 68, 1956-நவபர் 1_ம் நாள் தாய் தமிழகத்துடன் இணைக்கப்பட்டது.
இந்தியாவின் சுதந்திர போராட்டம் எத்தகைய புகழ், தியாகம், உயிர் பலி என்ற புகழ் வரலாறு உண்டோ, அதற்கு சற்றும் குறையாத தியாக வரலாற்றை கொண்டது. சுதந்திர இந்தியாவில் தாய் மொழி தமிழ் பேசும் குமரி மக்களின் சுதந்ரத்திற்கு இணையான, இன்னும் ஒரு சுதந்திர வரலாற்றை கொண்டது. கேரள மாநிலத்தின் பகுதியாக இருந்த குமரி மாவட்டம் பகுதியை தாய் தமிழகத்தோடு இணைக்க, குமரி தந்தை மார்சல் நேசமணி தலைமையில் நடைபெற்ற ” திருத்தமிழர் போராட்டம்.

குமரி தந்தை மார்சல் நேசமணி, நத்தானியல், பி.எஸ். மணி, கொடிக்கால் செலலப்பா, ஜீவானந்தம், டாக்டர்.மத்தியாஸ், குஞ்சன் நாடார், நாடார்,பொன்னப்பநாடார், உட்பட ஏராளமானோர். அன்று கேரளாவின் முதல்வராக இருந்த பட்டம் தாணு பிள்ளையின் அடக்கு முறைக்கு எதிராக களத்தில் நின்று போராடிய காலத்தில் துப்பாக்கி சூட்டில் பலர் மரணம் அடைந்தனர்.

அன்றைய பிரதமர் நேரு தலைமையிலான ஒன்றிய அரசின் மொழிவழி மாநிலங்கள் என்ற திட்டத்தால், குமரி தந்தை மார்சல் நேசமணி தலைமையில் நடைபெற்ற திருதமிழர் போராட்டம் வெற்றி பெற்று, 1956-நவம்பர் ஒன்றாம் நாள் குமரி மாவட்டம் கேரள மாநிலத்தில் இருந்து பிரித்து சென்னை மாகாணத்துடன் இணைந்ததின்.68-வது ஆண்டு இன்று சிறப்பிக்கப்பட்டது.


நாகர்கோவிலில் அசிசி தேவாலயத்தின் எதிரே இருக்கும். குமரி தந்தை மார்சல் நேசமணி நினைவு மண்டபத்தில் உள்ள குமரி தந்தை மார்சல் நேசமணியின் சிலைக்கு, குமரி ஆட்சியர் அழகு மீனா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் குமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், குளச்சல் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் பிரின்ஸ், குமரி மாவட்டம் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், நாகர்கோவில் துணை மேயர் மற்றும் ஏராளமான பொது மக்களும் இந்த நிகழ்வில் பங்கேற்று, குமரி தந்தை மார்சல் நேசமணியின் திருஉருவச்சிலையை வணங்கி சென்றனர்.


குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைக்கும் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய நேசமணி நினைவு மண்டபம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
