• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில்..,மாவட்ட அளவிலான மாபெரும் கிரிக்கெட் போட்டி..!

ByKalamegam Viswanathan

Nov 11, 2023

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் இன்று அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் நேற்று தொடங்கப்பட்ட மாவட்ட அளவிலான மாபெரும் கிரிக்கெட் போட்டி தொடங்கி வைக்கப்பட்டது.
இந்தப் போட்டியினை துவக்கி வைக்கும் விதமாக அறங்காவலர் குழு தலைவரும், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளருமான பிரபா பு.ராமகிருஷ்ணன் அவர்கள் பந்து வீச அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் பா.பாபு கிரிக்கெட் மட்டையால் பந்தை எதிர்கொண்டு சிறப்பு செய்தனர்.
இந்நிகழ்ச்சியில் கன்னியாகுமரி பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், ஒன்றிய துணைச் செயலாளர் பிரேமலதா, மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளர்கள் மாணிக்கராஜா, ஜென்சன் ரோச், வு.மு.சுந்தரம், ஜாண் சந்திரசேகர்,மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் தமிழன் ஜானி, மாவட்ட சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு துணை அமைப்பாளர் நிசார், மாவட்ட பிரதிநிதி எஸ்.சி.செல்வன், அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி கவுன்சிலர் சு.ளு.லிங்கம் உட்பட திரளான நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.