கோவையில் எலும்பு தொடர்பான நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பிரகதி மருத்துவமனை சார்பாக வாக்கத்தான் நடைபெற்றது.
உலக ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் மூட்டுவலி தினத்தை முன்னிட்டு, கோவை பிரகதி எலும்பியல் மற்றும் பல்துறை மருத்துவமனை மற்றும் ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் ஜெனித் ஆகியோர் சார்பாக விழிப்புணர்வு வாக்கத்தான் நடைபெற்றது.
எலும்பு ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற இந்த வாக்கத்தானை கோவை மாநகர காவல் துறை வடக்கு இணை ஆணையர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

இது குறித்து பிரகதி மருத்துவமனையின் தலைவர் டாக்டர் ஜி பாலசுப்ரமணியன் கூறுகையில், ஆஸ்டியோபோரோசிஸ், மூட்டுப் பிரச்சனைகள், முதுகுவலி மற்றும் எலும்பு முறிவுகள் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை மேற்கொள்வது அவசியம் என தெரிவித்தார்.
ஆரோக்கியமான எதிர்காலத்தை நோக்கி நடவடிக்கை எடுப்பதன் மூலம், இந்த அமைதியான நோய்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும், தடுப்பு நடவடிக்கைகளை ஊக்குவிப்பதிலும் நாம் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என அவர் கூறினார்.
இதில், மேலும் பிரகதி மருத்துவமனை செவிலியர்கள்,ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டு, ரேஸ்கோர்ஸ் பகுதி முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்திய படி நடை பயணம் மேற்கொண்டனர்.