கடந்த அதிமுக ஆட்சியில் செல்லூர் கண்மாய் குடிமராமத்து பணிக்காக ரூ.48 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்திருந்தது. இதில் கண்மாய் ஆழப்படுத்துவது, கரை உயர்த்துவது, கலுங்கினை சரி செய்வது போன்ற பணிகள் முழுமையாக நடைபெறவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த முறைகேட்டில் அதிமுக எம்.எல்.ஏ. உட்பட பல முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பிருக்கலாம் என்றும், சம்பந்தப்பட்டவர்களை விசாரிக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் தற்போது கண்மாயை பத்தடிக்கு ஆழப்படுத்தி தண்ணீர் தேக்கினால் செல்லூர் சுற்றுவட்டாரத்திலிருந்து 5 கிலோமீட்டர் சுற்றளவிற்கு நிலத்தடி நீர் மட்டம் உயரும் என்றும், கண்மாய் ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரைகளை அகற்ற வேண்டும் என்றும் பொதுப்பணித்துறைக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.