புதுக்கோட்டையில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் நயினார் நாகேந்திரன் ஏற்கனவே மேற்கொண்டு இருந்த தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்ற நிகழ்ச்சியின் நிறைவு நாள் நிகழ்ச்சி இன்று புதுக்கோட்டையில் மிகப் பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சிக்கு திரைப்பட நடிகை கஸ்தூரியும் வந்திருந்தார். நிகழ்ச்சி முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் அவர் கருத்து கூறுகையில்…
புதுக்கோட்டையில் எழுச்சி உரையை உள்துறை அமைச்சர் ஆற்றி உள்ளார்.

உள்துறை அமைச்சர் பேசிய ஒவ்வொரு வார்த்தையுமே தேர்தல் ஒவ்வொரு தேர்தல் பிரச்சாரம். ஒவ்வொரு வார்த்தையுமே இன்றைய தமிழக மக்களின் என்ன ஓட்டத்தை பிரதிபலிக்கும் வார்த்தைகள். என் டி ஏ கூட்டணியின் குறைகளையும் நிறைகளையும் பறைசாற்றும் விதமாக அந்த உரை அமைந்திருந்தது.
பாஜகவினருக்கு அவரது உரை எழுச்சியை கொடுக்கும் என்பதை தாண்டி பொதுமக்களின் மனதில் என்ன உள்ளதோ அதை தெளிவாக தெரிந்து வைத்து பேசி உள்ளார்.
ஏற்கனவே ஸ்டாலின் சார் என்பது ஊர் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தாலும் இன்று முதல் ஸ்டாலின் பாபு என்பது தான் இனி மக்களிடம் கேட்கும்.
தமிழக அரசு அறிவித்துள்ள ஓய்வூதியத் திட்டம் என்பது ஏமாற்று வேலை
ஆறாம் தேதி போராட்டத்தை ஜாக்டோ ஜியோ அறிவித்திருந்த நேரத்தில் முதல்வர் பேச்சுவார்த்தை நடத்தி பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
முதல்வர் அவருடைய ஆட்களை வைத்து பெரிய விழா எடுத்து பழைய ஓய்வூதியத் திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும் என்று 21 தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்தார். அதை தற்போது அறிவித்துள்ள அறிவிப்பில் ஏமாற்றியுள்ளார்.
தற்போது ஊழியர்கிட்ட இருந்து 10% பெற்றுக்கொண்டு அதை பென்ஷனாக் கொடுக்கிறோம் என்று கூறுவது சரியான ஏமாற்று வேலை இது ஒரு 420 வேலை.
நேற்று முதல்வர் அறிவித்துள்ளது ஓய்வூதியம் கிடையாது அது ஒரு பிஎஃப் பண்ட் போன்று தான்.

இதை மறைப்பதற்காக நேற்று மிகப்பெரிய விழா எடுத்து அனைத்து ஊழியர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி விட்டோம் என்று கொண்டாடியுள்ளனர்.
ஆறாம் தேதி நடக்க இருந்த போராட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்பதற்காகத் தான் நேற்று நடத்தப்பட்ட மிகப்பெரிய நம்பிக்கைத் துரோகம். இன்னும் மூன்று மாதத்திற்கு தான் இருக்கப் போகிறோம் என்பதற்கு தங்கள் இஷ்டத்திற்கு ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
தற்போது முதல்வர் அறிவித்து அறிவிப்பு என்பது ஏற்க முடியாது என்று பல சங்கங்கள் இன்று அறிவித்துள்ளது
இது திமுகவிற்கு மிகப்பெரிய பிரச்சனையாகும்
இது பெரிய நம்பிக்கை துரோகம் 3 மாதம் தான் உள்ளது அடுத்தது நாம் ஆட்சிக்கு வர மாட்டோம் என்று தெரிந்தே ஏமாற்றியுள்ளனர்
செல்வப் பெருந்தகை அவருடைய நிறைவு காலம் வரை தமிழக காங்கிரஸ் தலைவராக தொடர்வாரா என்பது சந்தேகம் தான்
காங்கிரஸில் தினமும் ஒவ்வொரு பிரச்சனைகள் வெடித்து வருகிறது. தினமும் ஒரு தலைவர்கள் அவரை கழுவி ஊற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
விஜய் குறித்த கேள்விக்கு பதில் அளிக்கலாம் ஆனால் மக்கள் பிரச்சினைகளில் இருந்து அது திசை திருப்பி விடும்.
தேர்தல் வருவதால் உங்களுக்கு அரசு 3000 ரூபாய் அறிவித்துள்ளது
கடந்த உங்களுக்கு அரசு உதயநிதி கையில் வைத்துக்கொண்டு எதை காட்டுவாரோ அதே முட்டையை த் தான் மக்களுக்கு கொடுத்து ஏமாற்றுவார்.
சொன்னதைத்தான் செய்வோம். செய்வதைத்தான் சொல்லுவோம் என்று மக்களுக்கு விபூதி அடித்தவர்களை மக்கள் மிக எளிதாக மறக்க மாட்டார்கள்.
பீகாரில் தேர்தல் நேரத்தில் பத்தாயிரம் ரூபாய் கொடுத்ததற்கும் தற்போது தமிழக அரசு கொடுப்பதற்கும் மிகப்பெரிய வேறுபாடுகள் உள்ளது பீகாரில் பெண்கள் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதற்காக தொழில் செய்வதற்காக கொடுத்த ஊக்கத்தொகை அதற்கும் இதற்கும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது.
அது மறைமுகமாக தேர்தல் லஞ்சம் கிடையாது. நாளை திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணியினர் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொங்கல் விழாவில் கலந்து கொள்கிறார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறினார்.




