• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

அவனியாபுரத்தில் நடிகர் விஜயகாந்த் மறைவுக்கு.., கட்சி நிர்வாகிகள் மொட்டை அடித்து அஞ்சலி..!

ByKalamegam Viswanathan

Dec 28, 2023
திருப்பரங்குன்றம் அருகே அவனியாபுரத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களின் மறைவு பற்றி தேமுதிக கட்சி நிர்வாகிகள் மொட்டை அடித்து அவரது படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா, அவனியாபுரம் பகுதி தேதிமுக சார்பில் தே.தி மு.க கட்சி தலைவர் விஜய்காந் மரணமடைந்ததையொட்டி, அவரது திருவுருவபடத்திற்கு கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மேலும் அவனியாபுரம் பகுதி தேமுதிக செயலாளர் செந்தில் 100  வட்ட செயலாளர் வெற்றி முருகேசன், தவமனி ஆகியோர் மொட்டையடித்து அஞ்சலி செலித்தினர். மற்றும் நிகழ்வில் 92வது வட்ட செயலாளர் அன்பழகன் பொதுக் குழு உறுப்பினர்கள் சேதுராமன். ராஜமாணிக்கம் மற்றும் கட்சியினர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.