ரேசிங் புரமோஷன்ஸ் நிறுவனத்தால் இந்தியன் ரேசிங் லீக் மற்றும் ஃபார்முலா 4 இந்தியன் சாம்பியன்ஷிப் கார்ப்பந்தயம் கோவை கரி மோட்டார் ஸ்பீடுவே மைதானத்தில் நடைபெற்றது..
லேசான காற்றுடன் சாரல் மழை இருந்தபோதும்,பந்தயத்தில் கலந்து கொண்ட வீரர்கள் காரை சீறி பாய விட்டனர்.

ரேஸ் துவங்குவதற்கு முன்பாக கரி மோட்டார்ஸ் ஸ்பீடு வே மைதானத்திற்கு சர்ப்ரைஸ் விசிட்டாக பிரபல நடிகர் நாகசைதன்யா வந்தார்.
அவரை கண்ட கார் பந்தய வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் ஆர்வமுடன் அவருடன் செல்பி எடுக்க குவிந்தனர்.
தொடர்ந்து அவர் ஸ்பீடு வே பார்வையாளர் அரங்கில் அமர்ந்து ரேசை கண்டு ரசித்தார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இதில் கோவா ஏசஸ் ரேசிங் அணி அதிக புள்ளிகளைப் பெற்று முதலிடம் பிடித்தது.

கிங்ஸ் பெங்களூரு அணி இரண்டாவது இடத்தையும்,, சென்னை டர்போ ரைடர்ஸ் அணி 3-வது இடத்தையும் பிடித்தன.
லேசான மழையுடன் ஈரமான பந்தய டிராக்கில் சீறிப்பாய்ந்த பார்முலா கார் பந்தயத்தை பார்ஙையாளர்கள் வியப்புடன் கண்டு ரசித்தனர்.