இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா நிமிஷா சஜயான் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள டி.என்.ஏ திரையரங்குகளில் வெற்றி கரமாக ஓடிவருகிறது.இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் மற்றும் நடிகர் அதர்வா ஆகியோர் கோவை பிராட்வே திரையரங்கிற்கு வருகை புரிந்து ரசிகர்களை சந்தித்து படம் குறித்து கேட்டறிந்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டனர்.
தொடர்ந்து இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய நடிகர் அதர்வா, திரையரங்குகளில் குடும்பத்தினருடன் அனைவரும் படத்தை பார்ப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். ஆக்சன் படங்கள் எனக்கு பிடிக்கும் எனவும் ஆக்சன் காட்சிகளை விரும்பி செய்வேன் எனவும் தெரிவித்த அவர் ஆக்சனை தாண்டி காதல் படம் பிடித்துள்ளதாக தெரிவித்தார். மேலும் இந்த படத்தில் குழந்தைகளை கையில் வைத்துக் கொண்டு பல காட்சிகளை எடுத்திருப்பதாகவும் குழந்தைகளுக்கு ஏற்ற நேரத்தில் தான் அந்த காட்சிகளை எடுக்க முடிந்ததாக தெரிவித்தார்.

மேலும் பலே என்ற படத்தை தற்பொழுது தான் முடித்திருப்பதாகவும் அது தவிர பராசக்தி மற்றும் இதயம் முரளி என்ற படங்கள் நடித்து வருவதாக தெரிவித்தார். இதயம் முரளி என்ற படத்தின் பெயரே எனக்கு மிகவும் நெருக்கமான ஒரு பெயர் என்று தெரிவித்த அதர்வா அது ஒரு நல்ல திரைப்படமாக அமையும் என தெரிவித்தார். மேலும் நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். சில படங்களை Pan India படங்களாகவே எடுப்பதாகவும் சில படங்கள் Pan India ஆகிவிடுவதாகவும் கூறிய அவர் அதனால் Language Barrier உடைவது நல்ல விஷயமாக கருதுவதாக தெரிவித்தார். இந்த திரைப்படத்தை திரையரங்குகளில் வந்து கண்டுக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய இயக்குனர், வெகுஜன மக்களின் ரசனைக்கு பக்கத்தில் இருக்க வேண்டும் என்று யோசித்து இதனை எடுத்திருப்பதாகவும் இதனை திரையரங்குகளில் பார்வையாளர்கள் பார்க்கும் பொழுது உணர முடிவதாக தெரிவித்தார். என்னுடைய திரைப்படத்தை கோவையில் பார்ப்பது இதுதான் முதல் முறை என தெரிவித்தார். திரையரங்குகளுக்கு வரும் பார்வையாளர்களுக்கு மொபைல் போன் மிகப்பெரிய டிஸ்ட்ரக்ஷன் ஆக அமைவதாகவும் சமூக வலைதளங்களில் 30 நொடி என்டர்டைன்மென்ட் வீடியோவிற்கு நாம் பழகி விட்டதாகவும் எனவே முழு படத்தையும் பார்ப்பதற்கு தேவையான முயற்சிகளை எடுத்திருப்பதாக தெரிவித்தார். தற்பொழுது உள்ள இளைஞர்கள் இன்ஸ்டாகிராம் ரீல் நினைவுகளில் இருந்து வெளியில் வந்து தற்பொழுது படங்களை பார்க்க துவங்கியிருப்பதாகவும் அதனை தொடர்ந்து ஆதரித்தால் நன்றாக இருக்கும் என தெரிவித்தார்.