• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கள்ளக்குறிச்சியில் நேரடி வகுப்புகள் தொடங்க நடவடிக்கை- அமைச்சர் அன்பில் மகேஷ்

Byகாயத்ரி

Jul 30, 2022

கள்ளக்குறிச்சியில் வன்முறைக்கு உள்ளான பள்ளியில் தற்போது ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடைபெற்று வரும் நிலையில் நேரடி வகுப்புகள் தொடங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஒருவர் மர்மமான முறையில் மரணம் அடைந்ததை அடுத்து இது குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மாணவி மரணம் காரணமாக பொதுமக்கள் மற்றும் மாணவியின் உறவினர்கள் வன்முறையில் ஈடுபட்டதால் பள்ளி அடித்து நொறுக்கப்பட்டது. இதனையடுத்து தற்போது அந்த பள்ளிக்கு ஆன்லைன் வகுப்புகள் மற்றும் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கள்ளக்குறிச்சியில் வன்முறைக்கு உள்ளான பள்ளியில் முதல் கட்டமாக 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி மாணவர்களை வேறு பள்ளிகளில் சேர்ப்பது குறித்து பெற்றோரிடம் கருத்து கேட்கப்பட்டு வருவதாகவும் பெற்றோர் விரும்பினால் வேறு பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.