• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

தமிழக உணவு பாதுகாப்பு துறை ஆணையாளர் புதிய ஆணை பிறப்பித்த ஒரே நாளில் அதிரடி நடவடிக்கை..!

ByG.Suresh

Jan 5, 2024

தடை செய்யப்பட்ட புகையிலை, போதை பொருட்களை விற்பனை செய்த கடைக்கு தமிழகத்திலேயே முதல் முறையாக 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து 15 நாட்கள் கடையை பூட்டிய உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்…

தமிழக உணவு பாதுகாப்புத்துறை ஆணையாளர் புதிய உத்தரவில் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் போதை பொருட்கள் விற்பனை தொடர்பாக, கடந்த நான்காம் தேதி ஒரு புதிய அரசு ஆணையை ஓன்றை பிறப்பித்துள்ளார். அதில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்யும் வணிக நிறுவனங்களுக்கு முதல் முறை என்றால் ரூபாய் 25,000, இரண்டாவது முறையாக இருந்தால் ரூபாய் 50,000 மூன்றாவது முறையாக இருந்தால் ரூபாய் ஒரு லட்சமும் வணிக நிறுவனத்தினுடைய ஆர் சி மற்றும் லைசென்ஸ் ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்புத்திருந்தார்.

இந்த உத்தரவின் பெயரில் இன்று சிவகங்கை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சரவணகுமார் தலைமையில் தீவிர சோதனை நடத்தியதில் சிவகங்கை காந்தி விதி பகுதியில் உள்ள வேணி ஸ்டோர் என்ற கடையில் குப்பைக்குள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த மூன்று கிலோ அளவிலான கணேஷ், கூலிப், விமல் பான் மசாலா போன்ற தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டது பறிமுதல் செய்யப்பட்ட கடைக்கு ரூபாய் 25,000 அவதாரமும் 15 நாட்கள் கடையை பூட்டியும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

முன்னதாக கடையின் அடிப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த போதைப் பொருட்களை மதுவிலக்கு காவலர் ஒருவர் தரையில் படுத்து போதைப் பொருள்களை வெளியில் எடுத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.