• Sat. Nov 22nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

உதயா நடிப்பில் வெளிவந்துள்ள அக்யூஸ்ட் திரைப்படம்

ByM.S.karthik

Aug 4, 2025

நடிகர் உதயா நடிப்பில் வெளிவந்துள்ள அக்யூஸ்ட் திரைப்படம் தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் நடிகர் உதயா இயக்குனர் பிரபுசீனிவாசன் உட்பட அக்யூஸ்ட் திரைப்பட குழுவினர்கள் நடிகர் உதயா ரசிகர் நற்பணி மன்ற மதுரை மாவட்ட தலைவர் மோகன் தலைமையில் மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள தனியார் திரையரங்கிற்கு சென்று ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு திரைப்படத்தின் விமர்சனங்களை கேட்டறிந்தனர்.

அப்போது ரசிகர்களிடம் நடிகர் உதயா சிவகார்த்திகேயனுக்கு முன்பே தலைவா திரைபடத்தில் துப்பாக்கியை என்னிடம் வழங்கி விட்டார் விஜய் என்று நகைச்சுவையோடு பேசினார். இதனையடுத்து மதுரை ரசிகர்கள் அக்யூஸ்ட் திரைப்படம் மிகவும் அருமையாக இருக்கிறது என்று தெரிவித்தனர். தொடர்ந்து பசித்தவருக்கு பசி துயர் நீக்குவோம் என்ற பிரெண்ட்ஸ் அறக்கட்டளையை நடிகர் உதயா அறிமுகம் செய்து வைத்தார்.