• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பணியின் போது வாகன விபத்தில் உயிரிழந்த சிறப்பு சார்பு ஆய்வாளருக்கு விபத்து காப்பீட்டு தொகை ரூ.78,00,000/-

ByKalamegam Viswanathan

Jan 30, 2024

பணியின் போது வாகன விபத்தில் உயிரிழந்த சிறப்பு சார்பு ஆய்வாளருக்கு விபத்து காப்பீட்டு தொகை ரூ.78,00,000/- வழங்கப்பட்டது.
மதுரை தெற்குவாசல் போக்குவரத்து காவல் நிலையத்தில் போக்குவரத்து சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக முருகன் (52) என்பவர் பணியாற்றி வரும் நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 18ஆம் தேதி திருப்பரங்குன்றத்தில் சூரசம்ஹாரம் விழா நடைபெறுவதால் திருப்பரங்குன்றம் ஆர்ச் அருகே அன்று இரவு 7.40 மணியளவில் போக்குவரத்தை நெரிசலின்றி சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது நகர பேருந்து மோதியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உடனடியாக வேலம்மாள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இவருக்கு மனைவியும் மகனும், மகளும் உள்ளனர். இவர் திருப்பரங்குன்றம் காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார். இவரது மகளுக்கு மட்டும் திருமணமாகியுள்ளது
வாகன விபத்தில் உயிரிழந்த மதுரை மாநகர் தெற்குவாசல் போக்குவரத்து காவல் சிறப்பு சார்பு ஆய்வாளர் K.முருகன் குடும்பத்திற்கு SBI வங்கி விபத்து காப்பீட்டு தொகை ரூபாய்.78,00,000/- மதுரை காவல் ஆணையர் முனைவர். J.லோகநாதன், IPS., முன்னிலையில் வழங்கப்பட்டது.