கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் மாசி மாத தேய்பிறை அஷ்டமி முன்னிட்டு கால பைரவருக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.
மாசி மாத தேய்பிறை அஷ்டமி முன்னிட்டு இன்று பல்வேறு பைரவர் ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்கார வள்ளி, ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் வீற்றிருக்கும் கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

நிகழ்ச்சி முன்னிட்டு காலபைரவருக்கு எனண்ணை காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பொடி,அரிசி மாவு, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக காலபைரவருக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலை அணிவித்த பிறகு ஆலயத்தின் சிவாச்சாரியார் உதிரையை பூக்களால் நாமாவளிகள் கூறினார்.
தொடர்ந்து சுவாமிக்கு தீபங்கள் காட்டப்பட்டு நெய்வேதிய சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் மாசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு நடைபெற்ற கால பைரவர் சிறப்பு அபிஷேக நிகழ்ச்சிக்கான ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் சார்பாக சிறப்பாக செய்தனர்.