• Tue. Oct 14th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

பிரபல நடிகையாக விரும்பி 15அறுவை சிகிச்சை செய்த இளம்பெண்..!

Byவிஷா

Aug 14, 2022

தென்கொரியாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் உலகத்திலேயே மிக அழகான பெண்ணாக மாறவேண்டும் என விரும்பி, அதற்காக 15அறுவை சிகிச்சை செய்து கொண்டது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
தென்கொரியாவை சேர்ந்த இளம்பெண் செர்ரி லீ (வயது 28). உலகின் மிக அழகான பெண்ணாக தோற்றமளிக்கவேண்டும் என இவருக்கு விருப்பம். அதற்காக தன்னை உருமாற்றி கொள்ள விரும்பியுள்ளார். இதனால், பிரபல நடிகையான கிம் கர்தேசியனை பின்பற்றி உள்ளார். இதுபற்றி செர்ரி லீ கூறும்போது,
கர்தேசியனை பார்த்து வளர்ந்தவள் நான். அவரை போலவே தோற்றமளிக்க வேண்டும் என விரும்பினேன். அவர் எப்போதும் எனக்கு ஓர் உந்துதலாக இருந்தவர். எனது பார்வைக்கு உலகின் மிக அழகிய பெண்மணியாக தெரிந்தவர் என கூறியுள்ளார். கிம் கர்தேசியன் மீது தீராத பற்று கொண்ட லீ தனது 20 வயதில் முதன்முறையாக தன்னை அழகுபடுத்தி கொள்ள அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். இது 15-க்கும் மேற்பட்ட சர்ஜரியில் கொண்டு போய் அவரை விட்டுள்ளது. முகம், கண்கள், மார்பு, இடுப்பு மற்றும் பின்பகுதி என உடலின் பல இடங்களில் அவருக்கு அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளன.
இதன்பின்னர் லீ கூறும்போது, நான் உண்மையில் முன்பிருந்ததற்கும், தற்போது இருப்பதற்கும் முற்றிலும் வேறுபட்ட நபராக காட்சியளிக்கிறேன். மேற்கத்திய பெண்ணாக தோன்றுகிறேன். எனது கொரிய குடும்பத்தினர் பலருக்கு என்னை அடையாளம் காணக்கூட முடியவில்லை என பெருமையுடன் கூறுகிறார். இந்த அறுவை சிகிச்சைகளை செய்து கொண்டதற்காக வருத்தம் எதுவும் கொள்கிறீர்களா? என கேட்டதற்கு, இல்லை என கூறும் லீ, எனது ஒரே வருத்தம் இவற்றை நான் முன்பே செய்திருக்க வேண்டும் என கூறுகிறார்.
கடந்த 2010-ம் ஆண்டு இவரது காதலருடன் மனமுறிவு ஏற்பட்டு உள்ளது. அதேவேளையில், தனது உருமாற்ற முடிவையும் அவர் எடுத்துள்ளார். தனது தோற்றம் மாறிய பின்னர், உறவை புதுப்பித்து கொள்ள அவரது காதலர் முன்வந்துள்ளார். ஆனால், அதனை மறுத்து விட்டேன் என லீ கூறுகிறார். கிம் கர்தேசியன் போன்று தோற்றமளிக்க விரும்பிய பிரேசில் நாட்டு மாடல் அழகி ஒருவர், அதற்காக கடந்த 12 ஆண்டுகளாக ரூ.4 கோடி வரை பணம் செலவிட்டு உள்ளார். இதனை சில வாரங்களுக்கு முன்பு அவர் கூறினார்.