• Tue. Nov 18th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

மது அருந்த சென்ற இளைஞர் வெட்டி படுகொலை!!

ByKalamegam Viswanathan

Jul 19, 2025

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வடபழஞ்சி கிராமம் அருகே முத்துப்பட்டியை சேர்ந்த சின்ன பாண்டி . இவரது மகன் கருப்புசாமி(வயது 27) இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும் இரு குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று இரவு கருப்புசாமி நண்பர்களுடன் ஆள் நடமாட்டம் இல்லாத வடபழஞ்சி அரசு பள்ளிக்கு எதிரே உள்ள கருவேலம் காட்டுக்குள் மது அருந்த சென்று உள்ளார். காலையில் அவ்வழியாக சென்றவர்கள் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு இறந்து கிடப்பதாக நாகமலை புதுக்கோட்டை காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நாகமலை புதுக்கோட்டை காவல்துறையினர் தடவியல் நிபுணர்களுடன் சோதனை செய்த பொழுது இறந்த வாலிபரின் பின் கழுத்து இடது தோள்பட்டை வலது தோள்பட்டை கை முகம் போன்ற ஆறு இடங்களில் வெட்டுப்பட்டு இருப்பது தெரியவந்தது.

சம்பவ இடத்தில் இறந்த வாலிபரின் உடலை கைப்பற்றி காவல் துறையினர் உடல் கூறு ஆய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பினர்.

போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் நண்பர்களுடன் மது அருந்த சென்ற பொழுது படுகொலை செய்யப்பட்டதாக தெரிவித்த நிலையில் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது மது அருந்தும் பொழுது ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டு கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் நாகமலை புதுக்கோட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசரணை செய்து வருகின்றனர்.

மேலும் கருப்ப சாமியுடன் சென்ற நண்பர்கள் மற்றும் வேறு யாரேனும் விரோதிகள் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.