• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

போதையில் அட்ராசிட்டி செய்த இளைஞரால் பரபரப்பு..,

ByS.Ariyanayagam

Sep 11, 2025

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் போதையில் டூவீலர்களை அடித்து நொறுக்கி, தரையில் உருண்டு புரண்டு அட்ராசிட்டி செய்த வடமாநில இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல், வேடசந்தூர் ஆத்துமேட்டு பகுதிக்கு வடமாநில வாலிபர் ஒருவர் மதுபோதையில் தள்ளாடியபடி வந்து. அங்கு நிறுத்தி வைத்திருந்த டூவீலர்களை அடித்து நொறுக்கியும், அச்சுறுத்தியும் அங்கும் இங்கும் சுற்றிக் கொண்டிருந்ததை பார்த்த பொதுமக்கள், அந்த வாலிபரை பிடித்து கை, கால்களை கட்டிப்போட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனிடையே கை, கால்களை கட்டிப்போட்டதால், வடமாநில வாலிபர் தரையில் உருண்டு பாம்பு போல நெளிந்து அட்ராசிட்டியில் ஈடுபட்டார்.
சம்பவ இடத்துக்கு வந்த வேடசந்தூர் போலீசார் விசாரணை நடத்தினர்.

அந்த வாலிபர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ராகுல் (27) தனியார் நூற்பாலையில் பணிபுரிந்து வருவதும் தெரிய வந்தது. மனைவியுடன் ஏற்பட்ட தகராறால், அளவுக்கு அதிகமாக மது அருந்தி ரகளையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதை தொடர்ந்து ராகுலை எச்சரித்த போலீசார், அவருடன் வேலை பார்க்கும் நண்பர்களை வரவழைத்து, ஆட்டோவில் அனுப்பி வைத்தனர்.