• Sun. May 12th, 2024

அரசு பேருந்து மீது இருசக்கர வாகன மோதி விபத்துக்குள்ளான பரபரப்பு..,

ByKalamegam Viswanathan

Oct 25, 2023

மதுரை பசுமலை அருகே இன்று மாலை 4.30 மணி அளவில் சிவகாசியிலிருந்து சேலம் செல்வதற்காக பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்தை ஓட்டி வந்தவர் மலைச்சாமி., இவர் ஆரப்பாளையம் செல்வதற்காக பசுமலை பகுதிக்கு வந்த போது உசிலம்பட்டி தாலுக்கா சீமானுத்து கிழக்குத் தெரு சேர்ந்த அழகுபாண்டி (24) வயது இளைஞர் உயர்ரக அதிக திறன் கொண்ட யமஹா இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்து கட்டுப்பாட்டை இழந்து பேருந்து முன்பு மோதி விபத்துக்குள்ளானது.

இச்சம்பவத்தை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக திருப்பரங்குன்றம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து விரைந்து வந்த திருப்பரங்குன்றம் காவல்துறையினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த அழகு பாண்டியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.

அரசு பேருந்து மீது உயரக இருசக்கர வாகனம் மோதும் பரபரப்பான சிசிடி காட்சிகள் தற்போது வெளியாகி, அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து விபத்து குறித்து மதுரை மாநகர போக்குவரத்து குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் விபத்து நடைபெற்ற போது காயம்பட்ட இளைஞர் அழகு பாண்டியை மீட்டு கொண்டிருக்கும் போது, அரசு பேருந்து ஓட்டுனர் மலைச்சாமி மணிபர்ஸ் மர்ம நபர்கள் பிட் பாக்கெட் அடித்துச்சென்றது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் குறித்தும் திருப்பரங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *