• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மதுரை பசுமலை பகுதியில் கோபாலி மலையில் பயங்கர தீ விபத்து

ByKalamegam Viswanathan

Feb 15, 2023

மதுரை பசுமலை பகுதியில் கோபாலி மலையில் பயங்கர தீ விபத்து., 4 மாவட்டத்திற்கு செல்லக்கூடிய துணை மின் பளு அனுப்புகை மையம் பாதிக்கப்படும் அபாயம்.
மதுரை திருப்பரங்குன்றம் பசுமலை அருகே அமைந்துள்ள கோபாலி மலையில் நேற்று மாலை ஏற்பட்டுள்ள காட்டுத் தீயினால் மலை அடிப்பகுதி முழுவதும் பல்வேறு இடங்களில் காட்டுத் தீயானது பரவி தற்போது தீப்பிடிக்க தொடங்கியுள்ளது. இதனைக் கண்ட பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட தீயணைப்பு துறையினருக்கும் தகவல் மதுரை டவுன் தீயணைப்பு வீரர்கள் இளைஞர்களை தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் தீ கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை மேலும் இருட்டான காரணத்தினாலும் வாகனம் அதற்கு மேல் செல்ல முடியாத காரணத்தினாலும் அனைத்தும் பணியில் தொய்வு ஏற்பட்டது எனினும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் வனத்துறையினர் மற்றும் அப்பகுதி மக்கள் அங்குள்ள இளைய தலைகளை கொண்டு தீயை அணிக்கும் வகையில் ஈடுபட்டனர்.


இதனைத் தொடர்ந்து அப்பகுதி இளைஞர்கள் பொதுமக்கள் தீ அணையை அணைக்க முற்பட்டபோது இப்பகுதியில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் மேலாடை இல்லாமல் வட மாநில இளைஞர் ஒருவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சோட்டு குமார் என்ற இளைஞரை பிடித்த போது அவரது கையில் ஐந்திற்கும் மேற்பட்ட தீப்பெட்டிகள் இருந்தது தெரிய வந்துள்ளது. இருப்பினும் இந்த மலை அடிவாரப் பகுதியில் 4 மாவட்டத்திற்கு அதாவது மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட பகுதிக்கு செல்லும் துணை மின் பழு அணுப்புகை மையம் செயல்பட்டு வருகிறது. இந்த தீ மல பளபளவென பற்றி எரிவதால் தற்போது அந்த பகுதியில் தீ பிடிக்கக்கூடிய அபாயம் உள்ளது இதனால் மின்சாரம் துண்டிக்கப்படும் அபாயம் உள்ளது. இந்த துணை மின் வழு அமைப்புகள் மையத்தில் இரண்டு 230 கிலோ வாட்ஸ் டிரான்ஸ்பார்மர் அதேபோல் இரண்டு 110 கிலோ வாட்ஸ் டிரான்ஸ்பார்மர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.