நீட் மருத்துவ நுழைவு தேர்வு இருந்த பொழுது ஆறு மாணவர்கள் படித்த போது இன்று வருடத்திற்கு 600 மாணவர்கள் மருத்துவம் படிக்கிறார்கள் என்று சொன்னால் அதற்கு காரணம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் முதல்வர் எடப்பாடி யார் ஆட்சி காலத்தில் தான் தமிழகத்தில் கொண்டுவரப்பட்டது – முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேச்சு

நீட் தேர்வு செய்ய ரகசியம் உள்ளதாக பொய்கூறி ஆட்சிக்கு வந்த திமுகவினரால், தமிழகத்தில் உயிரிழந்த 22 மாணவ, மாணவிகளுக்கு கரூர் மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில், முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தலைமையில் கரூர் தலைமை தபால் நிலையம் அருகே மெழுகுவர்த்தி ஏற்றி கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
அப்பொழுது பேசிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நீட் தேர்வில் நளினி சிதம்பரம் வாதாடி பெற்ற அந்த தீர்ப்பை பற்றி இன்று வரை வாய் திறக்காத ஸ்டாலின் அனிதா என்ற மாணவி உயிரிழந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். விளக்கு வேண்டும் என வழக்கு தொடுக்கிறார்கள் மற்றொருபுறம் நீட் தேர்வு வேண்டுமென பா சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்தை வைத்து நீட் தேர்வு வேண்டுமென தூண்டி விடுகிறார்கள் இதுதான் திமுக அரசின் சாதனை என்பதை மாணவச் செல்வங்கள் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும்
இந்தியா முழுவதும் மருத்துவக் கல்லூரி பயில மாணவ , மாணவிகளுக்கு நீட் தேர்வு அவசியமாகியுள்ள நிலையில், அதனை தமிழகத்தில் இருந்து ரத்து செய்வோம் என கூறி கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக வாக்குறுதி அளித்தது.
ஆனால் கடந்த நான்கு வருடங்களாக நீட் தேர்வு ரத்து செய்ய ரகசியம் இருப்பதாக கூறி ஆட்சிக்கு வந்த நிலையிலும், அனைவரும் ஒன்றாக சேர்ந்து கோரிக்கை வைப்பது தான் ரகசியமாம் நீட் தேர்வை ரத்து செய்ய இயலாத நிலையில் இதுவரை தமிழகம் முழுவதும் 22 மாணவ மாணவிகள் தேர்வு பயம் காரணமாக தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்.

அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் மருத்துவ படிப்பின் கனவை நினைவாக்க வேண்டும் என சட்டமன்றத்தில் 7.5% உள் ஒதுக்கீட்டை வழங்கியவர் தான் எடப்பாடி யார் மேலும் மாணவர்களின் மருத்துவப் படிப்பு செலவுகளை முழுமையாக அரசு ஏற்கும் என தெரிவித்தார். மருத்துவ நுழைவு தேர்வு இருந்த பொழுது ஆறு மாணவர்கள் படித்த போது இன்று வருடத்திற்கு 600 மாணவர்கள் மருத்துவம் படிக்கிறார்கள் என்று சொன்னால் அதற்கு காரணம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் முதல்வர் எடப்பாடி யார் ஆட்சி காலத்தில் தான் தமிழகத்தில் கொண்டுவரப்பட்டது என பெருமிதம் தெரிவித்தார்.
தொடர்ந்து மாணவ மாணவிகளின் உயிர் இழப்பை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து கரூர் தலைமை தபால் நிலையம்அருகே மாவட்ட மாணவரணி செயலாளர் வழக்கறிஞர் சரவணன் தலைமையில், முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுகவினர் ஏராளமானோர் கண்டன கோஷங்களை எழுப்பி 22 மாணவ மாணவிகளுக்கு மெழுகுவர்த்தி ஏத்தி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்வில் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.