கடந்த 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் பெஹல்கமில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் பலியான 28 அப்பாவி பொதுமக்களுக்கு கோவை மாவட்டம் பாஜக BJMM அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம் சார்பில் கண்ணீர் அஞ்சலி மற்றும் தீவிரவாதத்தை கண்டித்து கண்டன குரல் நிகழ்ச்சி சிவானந்த காலனியில் நடைபெற்றது.

இதில் அமைப்புசாரா தொழிலாளர்கள் மாவட்ட தலைவர் கே எஸ் சுப்பிரமணியம் ,மாவட்ட துணைத் தலைவர் சதீஷ் ராஜா ,மாவட்ட பொருளாளர் கோபாலகிருஷ்ணன் ,மண்டல் தலைவர் ஜெயக்குமார் ,மாவட்டச் செயலாளர்கள்
பூபதி ,மயில்ராஜ் ,மணிகண்டன்,நாகராஜ் திலீப்,தயாளன்,ராகுல்,சத்யராஜ்,
விஜயகுமார் மற்றும் அமைப்பு சாரா தொழிற்சங்கத்தின் மாநில மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.