கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயில் மீனபரணி தூக்கத் திருவிழா, கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. தமிழக கேரளாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.

10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில், பத்தாவது நாள் நடைபெறும் தூக்க நேர்ச்சையில் குழந்தை பாக்கியம் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியம் வேண்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் பச்சிளம் குழந்தைகளுடன் தூக்க நேர்ச்சை செலுத்துகின்றனர்.

தமிழகத்தில் பச்சிளங்குழந்தைகளுக்கு தூக்கநேர்ச்சை நடைபெறகூடிய கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கொல்லங்கோடு பத்திரகாளியம்மன் திருக்கோவில் பங்குனிமாதம் பரணி நட்சத்திரத்தில் தூக்கநேர்ச்சை நடைபெறுவது வழக்கம் இந்த ஆண்டிற்கான தூக்கதிருவிழா கொடியேற்றத்துடன் இன்று ( 13/03/26 )துவங்கியது தொடர்ந்து 10ஆம் திருவிழாவான வரும் 22 ஆம் தேதி பங்குனி மாத பரணியையொட்டி பச்சிளம் குழந்தைகளுக்காகான தூக்கநேர்ச்சை நடைபெற உள்ளது.
இவ்வாண்டு 1500 க்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை முன் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தூக்க திருவிழா கொடியேற்ற நிகழ்வில் தமிழக கேரளாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.



