தமிழகத்தில் அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக பார்வை திறன் அற்ற மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரெய்லி எழுத்துக்களை வாசிக்க உதவும் கருவிகள் நடப்பு நிதியாண்டில் பெற தேவையான விண்ணப்பங்கள் மாவட்ட நல அலுவலகங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த கருவியை பெறுவதற்கு விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகள் பார்வை திறன் பாதிக்கப்பட்டோருக்கான தேசிய அடையாள அட்டையை பெற்றெடுக்க வேண்டும். அதே சமயம் இளநிலை அல்லது முதுநிலை கல்வி படித்தவராக இருக்க வேண்டும்.
மேலும் படிப்பு முடித்தோர் ஆசிரியர் தகுதி தேர்வு மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் பணியாளர் தேர்வு போன்ற போட்டி தேர்வுக்கு பயிற்சி பெறுவராக இருக்க வேண்டும். இந்த தகுதிகள் இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட ஆவணங்களின் அசல் மற்றும் நகல் சான்றிதழ், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் புகைப்படம் ஆகியவற்றுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேரில் அல்லது அஞ்சல் மூலமாக விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது.