மதுரை பசுமலை அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் சுமார் 6 அடி நீளம் கொண்ட சாரைப்பாம்பு கொக்கோ கோலா(coca cola) காலி டின்னில் தலை மாட்டிக் கொண்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது, அப்போது பகுதி மக்கள் பாம்பு பிடிக்கும் வீரர் சிவன் பாண்டிக்கு தகவல் தந்தனர். உடனே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிவன் பாண்டி கொக்கோ கோலா காலி டிண்ணில் சாரைப்பாம்பு தலை மாட்டிக் கொண்டதை வெகு நேரம் போராடி மீட்டு பாம்பை காப்பாற்றி பாதுகாப்பாக வனப்பகுதியில் விடபட்டது.





