நடிகர் விக்ரம் பிரபு மற்றும் எல்.கே. அக்ஷய் குமார் நடிப்பில், உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள சிறைபடம், வரும் டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.


செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை இயக்குநர் வெற்றிமாறனின் இணை இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கியுள்ளார்.

இந்நிலையில் சிறை படத்தில் நடித்துள்ள நடிகர் விக்ரம் பிரபு,அக்ஷய்குமார்,இயக்குனர் சுரேஷ், மற்றும் சிறை படத்தின் கதை ஆசிரியரான
டாணாக்காரன் இயக்குநர் தமிழ்,ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம்
நடிகைகள் அனந்தா,அனீஷ்மா உள்ளிட்ட குழுவினர் கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்…
அப்போது பேசிய தமிழ்,
தான் உண்மையில் சந்தித்த அனுபவத்தை வைத்து, இப்படத்தின் கதையை எழுதியதாக தெரிவித்த அவர்,. ஒரு காவல் அதிகாரிக்கும், விசாரணைக் கைதிக்குமான பயணம் தான் இப்படத்தின் மையகரு என தெரிவித்தார்..

நடிகர் விக்ரம் பிரபு பேசுகையில்,டாணாக்காரன் படத்தை பார்த்து விட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த பாராட்டியதாக தெரிவித்த அவர்,அவருக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதாக கூறினார்..
உண்மைக்கு நெருக்கமான காட்சிகளை உருவாக்குவதில் இயக்குனர் வெற்றிமாறனுடன் பணியாற்றிய போது கிடைத்த அனுபவம் இந்த படத்தை இயக்க உதவியதாக சிறை பட இயக்குனர் தெரிவித்தார்..




