கோவை காந்திபுரம் பகுதியில் தலைக்கு ஏறிய மது போதை, ரோபோ பாணியில் நடந்து சென்ற நபர், அனைவரது கவனத்தையும் ஈர்த்த செல்போன் வீடியோ காட்சிகள் வைரல்
கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் கோவை மட்டுமல்லாமல் திருப்பூர் நீலகிரி ஈரோடு சேலம் போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் பல ஆயிரக் கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் இன்று காலை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் அருகே சாலையில் நடந்த செய்த நபர் தலைக்கு ஏறிய போதையில் திரைப்படங்களில் ரோபோ செல்வது போன்று மெதுவாக நடந்து சென்றும், திடீரென அசையாமல் நிற்பது போன்ற செய்கைகளை செய்தவாறு நடந்து சென்றார். இதனை அங்கிருந்த ஒரு நபர் தனது செல்போனில் வீடியோவை எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார் அது தற்பொழுது வைரலாகி வருகிறது. மேலும் அப்பகுதியில் கடந்து சென்ற பொதுமக்கள் சிறிது நேரம் இன்று அவர் ரோபோ போன்று வானில் நடக்கும் காட்சிகளைப் பார்த்து சிரித்து ரசித்தவாறு கடந்து சென்றனர்.