இராஜாக்கமங்கலம் ஒன்றியம், புதூர் பகுதியில் குடிசை வீட்டில் வாழ்ந்த ஏழை அ.தி.மு.க குடும்பத்திற்கு நேசகரம் நீட்டி வீடு கட்டி கொடுத்து உதவிய
கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய்சுந்தரம்
வீட்டினை திறந்து வைத்தார்.

இராஜாக்கமங்கலம் ஒன்றியம், புதூர் பகுதியில் குடிசை வீட்டில் வாழ்ந்த ஏழை அ.தி.மு.க குடும்பத்தை சேர்ந்தவருக்கு நேசகரம் நீட்டி வீடு கட்டி கொடுத்து முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய்சுந்தரம் உதவினார். இவ்வீட்டினை அவர் திறந்து வைத்தார்.
இதுபற்றிய விபரம் இராஜாக்கமங்கலம் ஒன்றியம், புதூர் பகுதியைச் சேர்ந்தவரும், முன்னாள் கிளைச் செயலாளருமான அசோகன. இவரது சகோதரர் ராகவன் ஆவார். இவரும் அ.தி.மு.க-வை சேர்ந்தவர். இவருடைய மனைவி ஸ்ரீதேவி. திரு. ராகவன் அவர்கள் இறந்து 6 வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு கீரிஷ் (வயது-12) என்ற ஆண் குழந்தை 7-வது வகுப்பிலும், மேகா (வயது-10) என்ற பெண் குழந்தை 5-ம் வகுப்பிலும் படித்து வருகிறார்கள். இவர்கள் எளிமையான சூழ்நிலையில், குடிசை வீட்டில் வாழ்ந்து வந்தார்கள்.
இந்நிலையில் இவரது வீடு மழை காலத்தில் தண்ணீர் புகுந்து வீடு பாதிப்புக்குள்ளானது. இப்பாதிக்கப்பட்ட வீட்டினை சரி செய்து தர ராகவனின் மனைவி ஸ்ரீதேவி கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய்சுந்தரத்திடம் கோரிக்கை வைத்தார். மேலும் பாதிக்கப்பட்ட வீட்டை அவர் நேரில் சென்று பார்வையிட்டார். அ.தி.மு.க குடும்பத்தை சேர்ந்த அப்பெண்மணியின் கோரிக்கையை ஏற்று கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய்சுந்தரம் தனது சொந்த நிதியிலிருந்து ரூ. 3 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்து பாதிப்புக்குள்ளான அவ்வீட்டினை புதிதாக கட்டி கொடுத்தார்.
இதன் திறப்புவிழா இன்று (21-11-2025) காலை நடைபெற்றது. ஏழை அ.தி.மு.க தொண்டர் குடும்பத்தை சேர்ந்த பெண்ணுக்கு புதிதாக கட்டப்பட்ட வீட்டினை முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய்சுந்தரம் திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். வீட்டினை கட்டி கொடுத்தமைக்காக அவருக்கு, மறைந்த அ.தி.மு.க தொண்டர் குடும்பத்தை சார்ந்தவர்களும், இவரது மனைவி ஸ்ரீதேவி மற்றும் குழந்தைகளும் நன்றி தெரிவித்தனர்.











; ?>)
; ?>)
; ?>)