• Sun. May 12th, 2024

வடிகால் இல்லா சுரங்கப்பாதையில் சாக்கடை நீரில் வசமாக மாட்டிய உயர் ரக (மினி கூப்பர்) கார்..,

ByKalamegam Viswanathan

Sep 19, 2023

மதுரை திருப்பரங்குன்றத்தில் மகளிர் காவல் நிலையம், திருப்பரங்குன்றம் மண்டல அலுவலகம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் பல்வேறு அரசு அலுவலகங்கள் இருப்பதால் போக்குவரத்து வசதிக்காக ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது.

இந்த சுரங்கபாதை அமைக்கப்பட்டு 10 வருடங்கள் மேல் ஆகிறது. அன்றிலிருந்து இன்று வரை மேலே செல்லும் சாக்கடை நீர் வடிகால் இல்லாததால் சுரங்கப்பாதை வழியாக தேங்கி நிற்கிறது.

இதனால் பள்ளி வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் அடிக்கடி தண்ணீரில் மாட்டிக்கொள்ளும் நிலை. இது குறித்து பலமுறை சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் மாமன்ற உறுப்பினர்களிடம் பலமுறை தெரிவிக்கவும், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இன்று சின்னாளப்பட்டியில் இருந்து மினி கூப்பர் காரை ஓட்டுநர் சரவணன் தனது முதலாளியின் மகளை தியாகராஜ பொறியர் கல்லூரியில் இறக்கி விடுவதற்காக வந்துள்ளார்..

பாலம் வழியாக சென்று தியாகராஜர் பொறியியல் கல்லூரிக்கு மாணவி செல்ல நேரமாகிவிட்டது என்று கூறவே சுரங்கபாதை வழியாக சென்றால் வேகமாக சென்று விடலாம் என்று சுரங்கப்பாதைக்குள் உயர் ரக காரை இயக்கியுள்ளார்.

சுரங்க பாதையில் சாக்கடைநீர் சூழ்ந்துள்ளதால் மினி கூப்பர் இன் உயர் ரக காரின் சைலன்ஸரில் தண்ணீர் ஏறியதால் கார் அப்படியே நின்று விட்டது.

இதனை அடுத்து சரவணன் அருகில் உள்ள பொதுமக்களை உதவிக்கு அழைத்து கிரேன் வசதி மூலம் காரை மீட்டெடுத்து சென்றனர்.

திருப்பரங்குன்றம் தொகுதி மக்கள் அதிகம் பயன்படுத்தக்கூடிய சுரங்க பாதையில் சாக்கடை நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களுக்கு டெங்கு தொற்று பரவும் அபாயம் ஏற்பட உள்ளது. சுரங்க பாதையை பயன்படுத்தும் வாகனஓட்டிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *