• Fri. Nov 14th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

செல்வபுரம் கிளை சார்பாக ஐம்பெரும் நிகழ்ச்சி..,

BySeenu

Sep 22, 2025

தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் 31 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கோவை செல்வபுரம் வடக்கு கிளை சார்பாக மருத்துவ முகாம் உட்பட ஐம்பெரும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.

த.மு.மு.க.31 வது ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாக தமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடந்து வருகின்றது.

இதன் ஒரு பகுதியாக கோவை செல்வபுரம் வடக்கு கிளை சார்பாக ஐம்பெரும் விழா செல்வபுரம் த.மு.மு.க.அலுவலகத்தில் நடைபெற்றது.

கழக கொடியேற்றுதல்,ஆண்களுக்கான ஹிஜாமா மருத்துவம்,இரத்தம் கண்டறியும் முகாம்,த.மு.மு.க.உறுப்பினர் சேர்க்கை மற்றும் பொது மருத்துவ முகாம் என ஐம்பெரும் நிகழ்ச்சியாக நடைபெற்ற இதில்,செல்வபுரம் கிளை தலைவர் அப்துல் ரஹ்மான் என்ற ராஜா தலைமை தாங்கினார்.

கிளை செயலாளர் ஷான் பாஷா மற்றும் துணை தலைவர் சிக்கந்தர் பாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக விழாவில் இலவச மருத்துவ முகாமை மாநில செயலாளர் சாகுல் ஹமீது துவக்கி வைத்தார்.

த.மு.மு.க.கோவை மத்திய மாவட்ட தலைவர் சர்புதீன் கழக கொடி ஏற்றி வைத்தார். ஹிஜாமா சிகிச்சை முகாமை மத்திய மாவட்ட செயலாளர் முஜிபுர் ரஹ்மான் துவக்கி வைத்தார்.

ஆர்.எஸ்.மருத்துவமனையுடன் இணைந்து நடைபெற்ற மருத்துவ முகாமில்,மூட்டு மாற்று அறுவை சிகிச்சை,முதுகு தண்டுவட சிகிச்சை,எலும்பு முறிவு சிகிச்சை,மற்றும் இரத்த வகை பரிசோதனை,பொது மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது.

இதில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.