• Sun. Oct 26th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

கோவை ஈச்சனாரியில் ஸ்போர்ட்ஸ் எக்ஸ்செலன்ஸ்–க்கான பிரத்யேக மையம் துவங்கப்பட்டது

BySeenu

May 16, 2024

பள்ளி மற்றும் கல்லூரி மாணவ,மாணவிகளிடையே விளையாட்டு திறன்களை ஊக்குவிக்கும் விதமாக, கோவை ஈச்சனாரி பகுதியில்,இரத்தினம் கல்வி குழுமத்தின் சார்பாக ஸ்போர்ட்ஸ் எக்ஸ்செலன்ஸ் பிரத்யேக மையம் துவங்கப்பட்டது.இதற்கான துவக்க விழா இரத்தினம் தொழில் நுட்ப வளாகத்தில் அமைந்துள்ள புதிய புல்வெளி கால்பந்து மைதானத்தில் நடைபெற்றது.. இரத்தினம் குழுமத்தின் தலைவர் டாக்டர். மதன் ஏ செந்தில், தலைமையில் நடைபெற்ற விழாவில்,துணைத் தலைவர் டாக்டர். நாகராஜ் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இரத்தினம் கல்வி குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர். மாணிக்கம் அனைவரையும் வரவேற்று பேசினார்…நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக, ஸ்போர்ட்ஸ் எக்ஸ்செலன்ஸ் மையத்தின் இயக்குனர்,இந்திய கால்பந்தாட்ட அணியின் முன்னாள் தலைவர், ராமன் விஜயன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பேசிய அவர்,

கல்வி கற்பதோடு விளையாட்டின் அவசியம் பற்றி கூறிய அவர்,விளையாட்டு என்பது ஆரோக்கியம் என்பது மட்டுமின்றி அதில் உள்ள தொழில் முறை பயன்கள்,வேலை வாய்ப்புகள் குறித்து பேசினார்.நிகழ்ச்சியில், இரத்தினம் கோயம்புத்தூர் எஃப்.சி. எனும் கால்பந்தாட்ட கிளப் துவங்கப்பட்டது. இந்த கிளப்-ன் வாயிலாக உறைவிட கல்வி மற்றும் விளையாட்டு மையம் வரும் கல்வியாண்டு முதல் துவங்க உள்ளதாகவும், மேலும், கல்வியாண்டு 2024-2025- க்கான மாணவர் சேர்க்கையும், இரத்தினம் கோயம்புத்தூர் எஃப்.சி – ற்கான மாணவர் சேர்க்கையும் தொடங்கியுள்ளது. இதில் விருப்பப்படும் பள்ளி மாணவர்கள் பங்குப்பெறலாம் என இரத்தினம் கல்வி குழுமங்களின் தலைவர் மதன் செந்தில் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் கல்விசார் பயிற்சிகள் மற்றும் வழிமுறைகள் இரத்தினம் கல்வி குழுமத்தின் வாயிலாகவும் விளையாட்டு சார் பயிற்சிகள் இந்த எக்சலென்ஸ் மையத்தின் வாயிலாகவும் நடைபெற உள்ளதால், மாணவர்கள் கல்வி மற்றும் விளையாட்டுத் துறையில் தங்களின் திறனை வளர்த்துக் கொள்ள ஏதுவாக இந்த மையம் செயல்பட உள்ளது குறிப்பிடதக்கது. இந்நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், உடற்கல்வி இயக்குனர்கள், விளையாட்டு வீரர்கள் என பலர் கலந்து கொண்டனர்.