• Sun. Sep 28th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

குடும்பத்தோடு பயணம் மேற்கொண்ட தம்பதியினர்..,

கன்னியாகுமரி சீரோ_பாயின்ட் பகுதியில் பயணித்த வாகனத்திலிருந்து, குடும்பமாக வெளிவந்த வந்து இந்தியாவின் எல்லையான கன்னியாகுமரி மண்ணில் கால் பதித்ததும். உடனிருந்து அருள் பாலித்த அனைத்து இறையருளுக்கும். காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை அவர்களை சுமந்து வந்த வாகனத்திற்கு நன்றி தெரிவித்தவர்கள் அடுத்து சொன்ன தகவல்.

நாங்கள் பயணம் தொடங்கிய பகுதிக்கு அருகில் தான் “பஹல்காம்” பகுதி இருந்தது.
காஷ்மீரின் சுவிட்சர்லாந்து எனப் புகழப்படும் பகுதியில் தீவிரவாதிகளின் தாக்குதலில்,வெளி நாட்டவர் உட்பட பல இந்திய மாநிலங்களை சேர்ந்தவர்கள். தீவிர வாதிகளின் துப்பாக்கி சூட்டில் மரணம் அடைந்தவர்களுக்கு, இந்தியாவின் தென் கோடி கன்னியாகுமரியில் இருந்து எங்களின் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் என அவர்களின் இரங்கலை தெரிவித்துப் பின் அவர்களது பயண அனுபவத்தை தெரிவித்தார்கள்.

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் மிலிண்ட் பாட்டில் (49 ), இவர் ஒரு ஐடி துறை ஊழியர். இவரது மனைவி ராஜஸ்ரீ பாட்டில் (36), மகன் குஷ் பாட்டில் (13), ரிஷப் பாட்டில் (18) இவர்கள் நான்கு பேரும் கடந்த மார்ச் 30ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் தங்களது பயணத்தை தொடங்கினர். அவர்கள் அங்கிருந்து ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ஹரியானா, டெல்லி, உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, தெலுங்கானா, ஆந்திரா, மேற்கு வங்காளம், பீஹார் , மகாராஷ்டிரா வழியாக நேற்று(ஏப்ரல்_23) கன்னியாகுமரி வந்து அடைந்தனர் .

அவர்கள் தங்கள் பயணம் குறித்து கூறும்போது தங்களுடைய வாழ்நாள் லட்சியமாக இது இருந்தது எனவும் 24 நாட்களில் 7200 கிலோமீட்டர் பயணம் செய்து இங்கு வந்திருப்பதாகவும் தெரிவித்தனர். இது தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் இந்தியா முழுவதையும் சுற்றிப் பார்ப்பதில் தாங்கள் மிகுந்த சந்தோஷம் அடைந்ததாகவும் தெரிவித்தனர்.

பல்வேறு மாநிலங்களில் மக்களின் வாழ்க்கை முறை, அவர்களின் கலாச்சாரம் ம்,பண்பாடு, மொழி இவற்றை தெரிந்து கொண்டதாகவும் இது தங்களுக்கு வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது எனவும் தெரிவித்தனர்.