• Wed. Mar 4th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

இதுவும் பேய் படமா..??? சோகத்தில் தனுஷ் ரசிகர்கள்!!

Byகாயத்ரி

Sep 27, 2022

தனுஷ் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நானே வருவேன் திரைப்படம் வரும் செப்டம்பர் 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை பார்க்க அனைவரும் காத்திருக்கும் நிலையில், படத்தின் டிக்கெட்டுக்கான முன்பதிவு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.

செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு இவர்களது கூட்டணி இணைந்துள்ளதால், படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளது. ஏற்கனவே படத்திலிருந்து வெளியான டீசர், மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பொதுவாக ஒரு படம் வெளிநாடுகளில் சென்சார் சான்றிதழ் வாங்கும்பொழுது அதற்கு கொடுக்கப்பட்ட கதையை அவர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் நானே வருவேன் படத்தின் கதை தற்போது வெளியாகியிருக்கிறது. அதன் படி, பேய் பிடித்திருக்கும் மகளை காப்பாற்றும் தந்தையின் கதைதான் நானே வருவேன். இதற்கு முன் செல்வராகவன் இயக்கிய நெஞ்சம் மறப்பதில்லை படமும் பேய்ப் படமாகவே அமைந்திருந்தது, எனவே தனுஷ் ரசிகர்கள் சற்று சோகத்தில் இருக்கிறார்கள்.