• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கொரோனாவை காட்டிலும் மின்சார உயர்வு தான் மக்களை பாதித்தது… ஜி.கே.வாசன் பேச்சு..

Byகாயத்ரி

Sep 24, 2022

பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 87வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது உருவப்படத்திற்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், உலகளவில் தமிழர்கள் இருக்கும் இடமெல்லாம் பத்திரிகை துறையை கொண்டு சேர்த்த பெருமை டாக்டர் சிவந்தி ஆதித்தனாரையே சேரும் என புகழாரம் செய்தார். மேலும், கொரோனாவை விட மின்சார உயர்வு மக்களை பெரிய அளவில் பாதித்துள்ளது. உடனடியாக அதை வாபஸ் பெற வேண்டும். பரம்பிக்குளம் ஆழியார் அணையின் பிரதான மதகுகள் சேதமடைந்துள்ளது அதை சரி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; மற்ற மதகுகளின் உறுதி தன்மையையும் சரி பார்த்து உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்தார்.