• Thu. Oct 15th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

விஜய் சேதுபதியுடன் நடிக்கும் “வைகைப் புயல்”.. அவரே சொல்லிவிட்டார்…

Byகாயத்ரி

Sep 23, 2022

நடிகர் வடிவேலு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். தற்போது நாய்சேகர் ரிட்டர்ன்ஸ், மாமன்னன் மற்றும் சந்திரமுகி 2 ஆகிய படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார். இதில் முதலில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் ரிலீஸாக, அடுத்தடுத்து மற்ற படங்கள் ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் அடுத்து தான் நடிக்க உள்ள படம் பற்றி வடிவேலு கூறியுள்ளார். திருச்செந்தூர் கோயிலுக்கு வழிபாட்டுக்கு வந்த வடிவேலு பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் “அடுத்து விஜய் சேதுபதியோடு இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக” கூறினார்.இதை கேட்ட ரசிகர்கள் இருவரின் ரசிகர்களும் உற்சாக கூச்சல் போட்டு வருகின்றனர்.