• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

திருச்சியில் கல்லூரி, பள்ளி வேன் நேருக்கு நேர் மோதி விபத்து…

Byகாயத்ரி

Aug 26, 2022

திருச்சி சமயபுரம் டோல்கேட் அருகே உள்ள கூத்தூரில் செயல்படும் தனியார் கல்லூரி பாலிடெக்னிக் பேருந்து இன்று காலை 50 மாணவர்களுடன் ஸ்ரீரங்கத்தில் இருந்து கூத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. பேருந்தை கண்ணன் என்பவர் ஓட்டி வந்தார்.

இந்த பேருந்து ஸ்ரீரங்கம் திருவானைக்காவல் பாலத்தில் இறங்கும்போது அதன் வேகம் அதிகமாக இருந்துள்ளது. வயது முதிர்வு காரணமாக டிரைவர் கண்ணனால் பேருந்து ஓட்டத்தை கட்டுப்படுத்த இயலவில்லை. கட்டுப்பாட்டை இழந்த அவரின் பேருந்து சாலையின் ஓரத்தில் இருந்த ஆட்டோ, இரு சக்கர வாகனங்கள் மீது மோதியதுடன் நில்லாமல் எதிரே வந்த மற்றொரு தனியார் பள்ளி வேன் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 மாணவி,ஒரு மாணவன் மற்றும் பொதுமக்கள் என 10 க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது. காயமடைந்த அனைவரும் திருச்சி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.