• Fri. Dec 5th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

செவிலியர் மாணவிகள் 46 பேருக்கு கொரோனா:

By

Sep 16, 2021 ,

கோவையில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில், வெளி மாநிலங்களில் இருந்து வரும் மாணவ-மாணவிகள் கண்டிப்பாக 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் அல்லது அவர்கள் கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்ட இருந்தது.

இதனையடுத்து,கே.ஜி.நர்சிங் கல்லூரியில் கேரளாவை சேர்ந்த மாணவ-மாணவிகள் படித்து வரும் நிலையில் நர்சிங் படிக்கும் மாணவிகள் 46 பேருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த கல்லூரி மூடப்பட்டது. இதனை தொடர்ந்து கல்லூரியில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடந்து வருகிறது.

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் நடத்திய விசாரணையில், இந்த நர்சிங் கல்லூரியில் கேராளவை சேர்ந்த மாணவிகளை தனிமைப்படுத்தாமல், பிற மாணவிகளுடன் ஒரே வகுப்பறையில் ஒன்றாக அமர வைத்துள்ளனர். இதனால் அந்த மாணவிகள் மூலம் பிற மாணவிகளுக்கு கொரோனா தொற்று பரவியது தெரியவந்தது.

இதையடுத்து கோவை மாநகராட்சி சார்பில் கே.ஜி. நர்சிங் கல்லூரிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு, விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுக்கப்பட்டதாக தெரிவித்தனர்.